என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை, தென்காசியில் விவசாய பணிகள் தீவிரம்
    X

    மானூர் யூனியன் பல்லிக்கோட்டை கிராமத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள் சம்பங்கி பூக்கள் பூத்துக்குலுங்குவதை காணலாம்

    அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நெல்லை, தென்காசியில் விவசாய பணிகள் தீவிரம்

    • கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பிசான பருவ சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக மழை இல்லை.

    மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் அடித்தது. மூலக்கரைப்பட்டியை சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மாவட்டத்தில் அம்பையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், நடுக்கல்லூர், சீவலப்பேரி வரையிலும் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் நெல் நடவு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அணையில் தண்ணீர் திறப்பால் குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து, கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பிசான பருவ சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 96.70 அடியையும், சேர்வலாறு அணை 110 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 786 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66.80 அடியாக உள்ளது.

    இதனால் மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் பயன்பெறும் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களிலும் நெல் நடவு ஆயத்த பணிகளை விவசாயிகள் தொடங்கி ஈடுபட்டு வருகின்றனர்.

    வழக்கமாக கார், கோடை, பிசானம் ஆகிய மும்முறை நெல் நடவு செய்யும் பணிகள் நெல்லையில் இருந்து வரும் நிலையில், அதிக உற்பத்தி கிடைக்கும் பருவமாக பிசான பருவமே இருந்து வருகிறது. தற்போது மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தொழி அடித்தல், நாற்று நடுதல் ஆகிய பணிகை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டிய நிலையில் அதில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×