என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சக்திவேல் காவல் கிணறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பணகுடி:

    நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் சக்திவேல் (வயது19). மோட்டார் மெக்கானிக். இவர் நேற்று பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பகுதிக்கு மெக்கானிக் வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் காவல்கிணறு பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது.
    • அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வந்தது. இந்த கோடை வெயிலால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு மதிய வேளைகளில் குளிர்பானங்களை தேடி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவானது. கன்னடியன்கால்வாய் பகுதியில் 7.20 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அம்பையில் காலையில் கடும் வெயில் அடித்த நிலையில் மாலை பரவலாக மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே இந்த மழை பெய்தாலும் மாலை வேளையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி குளிர்ச்சியான சூழல் உருவாகியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
    • மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வள்ளியூர்:

    மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வள்ளியூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறி யாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் வளன்அரசு மற்றும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் முடிந்த வுடன் வள்ளியூர் கோட்டத்தில் அனைத்து பிரிவு அலுவல கத்திலும் தொடர்ச்சியாக பாதுகாப்பு வகுப்புகள் நடத்தி பணியாளர்கள் பாதுகாப்பு நெறி முறைகளுடன் பணிபுரிய உத்தரவிட்டார்.

    மாணவ -மாணவி களுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால், கோடை காலத்தில் ஏற்படும் திடீர் சூறைக்காற்று மழை இடி, மின்னல் காரணமாக இயற்கை இடர்பாடுகளால் மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவத ற்கும், தவிர்க்க இயலாத நேர த்தில் அனை வரும் ஒருங்கி ணைந்து பணி யாற்றி மின் வினி யோகம் விரை வில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.

    • வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • இளம்பெண்ணின் மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கிராம பகுதி ஒன்றில் 32 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வரு கிறார். இதனால் மாதத்திற்கு 2 முறை மட்டும் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த இளம்பெண் தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த பெண் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தனியாக படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரது மாமியாரும், குழந்தைகளும் வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு, வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து திடுக்கிட்டு விழித்த அந்த பெண்ணை அவர் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டார்.

    எனவே மர்ம நபர் அவர் வாயை பொத்தி, தாக்கினார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். அதற்குள் அவரது சத்தம் கேட்டு, மாமியார் எழுந்து வந்ததால், அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகிறார்.

    • முகாமை புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
    • இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பேராலய வின்சென்ட் தி பவுல் சபை மற்றும் வள்ளியூர் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் தலைமை தாங்கி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் ஜான் வின்சென்ட், செயலாளர் எட்வின் ஜோஸ், பொருளாளர் டாக்டர் ஜார்ஜ் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் தலைவர் ஜான் வின்சென்ட் வரவேற்றார். நெல்லை மருத்துவக் கல்லூரி ரத்ததான முகாம் குழு மருத்துவர்கள் ரவிசங்கரன், மணிமொழி, திருவேங்கடம், ஆய்வக நுட்புனர் ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் பெற்றுக் கொண்டனர்.

    வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஜெகதீசன், வாசகன், ராஜவேலு, சசிகுமார், அன்னை தெரசா ரத்ததான இயக்க தலைவர் ரீகன் மற்றும் பிற ரத்ததான அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் டாக்டர் ஜார்ஜ் திலக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வள்ளியூர் லயன்ஸ் கிளப் குழுவினர் செய்திருந்தனர்.

    • போலீசார் ரூபேசை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • விசாரணைக்கு வந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    களக்காடு:

    சென்னை, அம்பத்தூர் பாடியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரூபேஷ் (வயது36). இவரும், நெல்லை மாவட்டம் மூங்கிலடி வடக்கு தெருவை சேர்ந்த இளவரசி (33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பின் ரூபேஷ், மனைவி இளவரசியுடன் மூங்கிலடியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் ரூபேஷ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி அவரை அவதூறாக பேசி வந்துள்ளார். கடந்த 5-ந் தேதியும் அவர் மனைவி இளவரசியின் மீது சந்தேகம் கொண்டு அவரை தாக்கினார். இதுகுறித்து இளவரசி களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதுபற்றி விசாரணை நடத்த ரூபேசை போலீசார் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர். அதன்படி நேற்று ரூபேசும், அவரது மனைவி இளவரசியும் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    போலீசார் வேறு வழக்கு தொடர்பாக விசாரித்து கொண்டிருந்ததால், இருவரும் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது திடீர் என ரூபேஷ் தனது மனைவியின் முன்பு, போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்தார். இதைப்பார்த்த இளவரசி சத்தம் போட்டார். உடனே போலீசார் ரூபேசை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணைக்கு வந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே ரூபேஷ் இதுபோல 3 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இளவரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உள்ளிட்டோர் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்து அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
    • இன்ஸ்பெக்டர் உட்பட 4 இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு உதவியாளர், தனிப்பிரிவு போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட சரகத்தில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

    இதுவரை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 4 இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு உதவியாளர், தனிப்பிரிவு போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 30-ந்தேதி கொல்கத்தாவை சேர்ந்த ஆசிஸ் கோவில் என்ற வக்கீல், அம்பை பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உள்ளிட்டோர் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்து அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் வி.கே.புரம் பகுதியை சேர்ந்த வேதநாராயணன் என்பவர் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதேபோல் அம்பை காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நடந்த சித்திரவதை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 3 மனுக்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    • மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து கரடி மாயமானது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும் உள்ளன.

    இந்த நிலையில் மாஞ்சோலை 12-ம் காடு என்ற பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்து கொண்டிருந்தது. தொடர்ந்து சிறிது நேரம் நின்ற நிலையில் தேயிலை செடிகளுக்கள் புகுந்து மாயமானது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அந்த கரடியை வீடியோ எடுத்துள்ளனர்.

    தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் மாஞ்சோலையில் சுற்றித்திரிந்த சிறுத்தை ஒன்று தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளியை தாக்கியது.

    • தமிழகம், புதுச்சேரி முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 279 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 279 மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 2 மாணவர்களும், 11 ஆயிரத்து 895 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதினர். இதற்காக நெல்லை கல்வி மாவட்டத்தில் 36 மையங்களும், சேரன்மகா தேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் என ெமாத்தம் மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தது.

    மாணவ, மாணவிகள் இன்று காலை 8 முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பாக இறுதியாக ஒருமுறை தாங்கள் படித்ததை நினைவுபடுத்தி கொண்டனர்.

    பாளை மத்திய சிறையில் இன்று 12 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இதற்காக சிறை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர தனித்தேர்வர்க ளுக்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 310 பள்ளிகளில் படிக்கும் 22 ஆயிரத்து 921 மாணவ-மாணவிகள் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    தேர்வை கண்காணிக்க 107 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 107 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பா ளர்கள் மற்றும் 214 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை மொத்தம் 20 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    இதில் தனித்தேர்வர்கள் 4 மையங்களில் தேர்வு எழுதனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 279 மையங்களில் மொத்தம் 65 ஆயிரத்து 845 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    • சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
    • அனைத்து பஸ்களும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் நாடார் தலைமையில் மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார் ஆகி யோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு கொடுத்த னர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

    எனவே அதனை உடனடியாக திறக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். அதுவரை அனைத்து பேருந்துகளும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    சந்திப்பு பஸ் நிலையம்

    பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் ஏராள மான கடைகள் உள்ளது. இதனை நம்பி அவர்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்கள்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்காக கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வரு கிறார்கள்.

    எனவே இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடந்தாலும் அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வந்தது.

    ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவை நிறுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. எனவே பஸ் நிலையத்தை திறக்கும் வரை அனைத்து பஸ்களும் அங்கு சென்று வர நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், தொகுதி செயலாளர் கருப்ப சாமி, துணைத் தலைவர் ஸ்டீபன், செய்தி தொடர்பா ளர் பகவதி, சந்திப்பு வியா பாரிகள் சங்க தலைவர் பெர்னா ண்டோ, செயலா ளர் ரவீந்திரன், பொருளா ளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    • அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும்.

    வள்ளியூர்:

    தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட் டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென் கரையில் அமைந்து ள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங் காடு என்றழைக்கப் படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீ உயரம், 36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது.

    கலெக்டர் தொடங்கி வைத்தார்

    இந்த தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்ச நல்லூருக்கு சமகால கட்டமாகும். இங்கு 2-ம் கட்ட அகழாய்வு பணியினை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செய லாளர் டாக்டர் சந்தர மோகன் மற்றும் தொல்லி யல் துறை ஆணையர் சிவானந்தம் வழிகாட்டு தலின்படி, அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார், அகழாய்வு இணை இயக்குனர் காளீஸ்வரன், தலைமை யில் அகழாய்வு பணி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் ஆனை குளம் ஒன்றிய வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பஞ்சாயத்து தலைவர் அசன், அரசு ஒப்பந்ததாரர் ஷேக், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். பின்னர் கலெக்டர் கார்த்தி கேயன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பண்டையத் தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

    தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 11.2.2022 பொருநை ஆற்றின் ஈடாக நம்பியார் படுகையிலும் அகழாய்வுகள் மேற்கொள் ளப்பட்டு ள்ளன. 8 மாதங்கள் நடைபெற்ற இந்த அகழாய்வில் 17 குழிகள் அமைக்கப்பட்டு இதுவரை 109 தொல் பொ ருட்கள் கண்டெடுக்க ப்பட்டுள்ளது.

    வெள்ளி முத்திரைக் காசுகள், செம்பிலான பொருட்கள், இரும்பில் ஆன பொருட்கள், சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள், நீலக்கல் கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் ஆகிய முக்கிய தொல்பொருட்கள் ஆகும். தமிழில் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக அகழாய்வு பணிகள் இன்று தொடங்கின.

    இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல் பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவது ஆகும். நம்பி ஆற்றங் கரையில் இரும்பு கால பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்அகழாய்வின் நோக்கமாகும்.

    நம்பியாறு நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி இதே மாவட்டத்தில் ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் சுமார் 45 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆற்றில் பழங்கா லத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவில்கள் இருந்ததாகவும், பண்டைய மக்களின் வாழ்வியல் இடமாக சிறந்ததாகவும், பண்பாட்டுக் கூறுகள் மூலம் கண்டறியப் பட்டுள்ளன.

    இந்த நம்பியாறு படுகை பண்டைய தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தின் தொட்டில் ஆகவும், வியாபாரத் தளமாகவும், ஆன்மீக தலமாகவும் பல அரசர்கள் ஆட்சி செய்யும் இடமாகவும் திகழ்ந்துள்ளது. இதற்கு சான்றாக தான் இன்றும் இந்த பகுதியில் ராஜாக்கள் வாழ்ந்த இடம் ராஜாக்கமங்கலம் என்றும், தளபதிகள் வாழ்ந்த இடம் தளபதி சமுத்திரம் என்றும், இரணியன் என்ற அரசன் வாழ்ந்த இடம் இரணியன் குடியிருப்பு என்று பல தொல்லியல் சிறப்புடைய பகுதிகள் இங்கு அமைந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
    • இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

    போலீசார் ரோந்து

    இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலை யத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வியாபாரி கண்ணன் என்பவரிடம் இருந்து 2 பேர் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த னர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் பிக்பாக்கெட் அடித்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசா ரணையில் அவர்கள் மேலப் பாளையம் குறிச்சியை சேர்ந்த சக்தி வேல் (வயது57), கல்லிடைக் குறிச்சியை சேர்ந்த அருள் துரை (33) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் இதற்கு முன்பு வேறு பயணிகளிடம் கைவரிசை காட்டி னார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×