என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    களக்காட்டில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தில் சென்னை வாலிபர் தற்கொலை முயற்சி
    X

    தற்கொலைக்கு முயற்சி செய்த ரூபேஷ்.

    களக்காட்டில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தில் சென்னை வாலிபர் தற்கொலை முயற்சி

    • போலீசார் ரூபேசை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • விசாரணைக்கு வந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    களக்காடு:

    சென்னை, அம்பத்தூர் பாடியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரூபேஷ் (வயது36). இவரும், நெல்லை மாவட்டம் மூங்கிலடி வடக்கு தெருவை சேர்ந்த இளவரசி (33) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பின் ரூபேஷ், மனைவி இளவரசியுடன் மூங்கிலடியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் ரூபேஷ் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி அவரை அவதூறாக பேசி வந்துள்ளார். கடந்த 5-ந் தேதியும் அவர் மனைவி இளவரசியின் மீது சந்தேகம் கொண்டு அவரை தாக்கினார். இதுகுறித்து இளவரசி களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதுபற்றி விசாரணை நடத்த ரூபேசை போலீசார் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர். அதன்படி நேற்று ரூபேசும், அவரது மனைவி இளவரசியும் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    போலீசார் வேறு வழக்கு தொடர்பாக விசாரித்து கொண்டிருந்ததால், இருவரும் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது திடீர் என ரூபேஷ் தனது மனைவியின் முன்பு, போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்தார். இதைப்பார்த்த இளவரசி சத்தம் போட்டார். உடனே போலீசார் ரூபேசை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணைக்கு வந்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே ரூபேஷ் இதுபோல 3 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இளவரசி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×