என் மலர்
திருநெல்வேலி
- ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- தூய்மை பணியாளர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.
நெல்லை:
சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடத்தப்படும் இந்த மெகா தூய்மை பணியில் இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமையான இன்று வானகரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட கீழரத வீதி, மேல ரதவீதி மற்றும் குற்றாலம் ரோடுகளில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், உதவி கமிஷனர் வெங்கட் ராமன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், தூய்மை பணியாளர்கள் பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல் பாளை பகுதியில் சுகாதார அலுவலர் முருகேசன் தலைமையில் சுகாதார ஆய்வா ளர்கள் சங்கரநா ராயணன், பெருமாள், அந்தோணி மேற்பார் வையில் தூய்மை பணியா ளர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தும் பணியை தொடர்ந்தனர்.
- பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் காசிநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் வீரபாகு சேனைத்தலைவர் இளைஞர் அணி சார்பில் 3-ம் திருநாள் மண்டகப்படி நடைபெற்றது.
இதைமுன்னிட்டு அம்பை நகராட்சி கலையரங்கம் அருகே மாணவ- மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைப்பெற்றது. ஏற்பாடுகளை இளைஞரணி தலைவர் துரை, செயலாளர் செல்வராஜ், துனைத்தலைவர் சிவக்குமார், பொருளாளர் ரவி மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
- நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம்.
நெல்லை:
காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கொக்கிர குளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில் மறியல் போராட்டம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தி விடுவார் என்ற பயத்தில் மத்திய அரசு அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தது.
பிப்ரவரி 7-ந் தேதி ரூ.20 ஆயிரம் கோடி அதானி தொடர்புடைய நிறுவனத்திற்கு வந்துள்ளது. அது யாருடைய பணம்? 2014-ம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-ம் இடத்தில் இருந்த அதானி, 2022-ம் ஆண்டு 3-ம் இடத்திற்கு வந்துள்ளார். இது எப்படி?
இதுகுறித்து ராகுல் காந்தி உண்மையை கூறிவிடுவார் என நினைத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக படுகொலை. இதனை கண்டித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். அந்த வகையில் வருகிற 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டமும், 20-ந் தேதி தபால் நிலையங்களில் முற்றுகை போராட்டமும் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், கவி பாண்டியன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திரன், மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், முகம்மது அனஸ் ராஜா, பரணி இசக்கி, கெங்கராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
- சுரேஷ்குமார் தனக்கு சொந்தமான ஜே.சி.பி.யை அப்பகுதியில் நிறுத்தி இருந்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
நெல்லை:
பெருமாள்புரம் அருகே உள்ள ஆயன்குளம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஜே.சி.பி.யை அப்பகுதியில் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்த போது, ஜே.சி.பி.யின் பேட்டரி திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பேட்டரியை திருடியது ரெட்டி யார்பட்டி யை சேர்ந்த ஜெகன் (30) மற்றும் மகி ழ்ச்சி நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் (30) என்பது தெரியவந்தது. இதைத் தொ டர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- விழாவையொட்டி நாளை மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்.
- 11-ந் தேதி காலை பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை:
நெல்லை டவுன் மேல குன்னத்தூரில் ஞானம்மாள் கட்டளை நாடார் சமுதா யத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து 10 மற்றும் 11-ந்தேதிகளில் கோவில் கொடை விழா நடக்கிறது.
விழாவையொட்டி நாளை மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பம் ஏற்றுதல், தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சிக்கு பின்னர் நள்ளிரவில் சாஸ்தா சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். கடைசி நாளான வருகிற 11-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை குன்னத்தூர் கஸ்பா அரசடி பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதலும், மதிய கொடையும் அதன் பின்னர் அன்னதானமும் நடைபெறும். மாலையில் கருப்பந்துறை விளாகம் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வருதலும், அலங்கார தீபாராதனையும் நடைபெறும். முடிவில் சாம கொடையுடன் கோவில் திருவிழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- பாலாஜி,துரைப்பாண்டி ஆகியோர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- ஆத்திரமடைந்த இருவரும் சுந்தரராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.
நெல்லை:
பாளை ரெட்டியார்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 38), தொழிலாளி. இவரது வீட்டின் அருகே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி (26) மற்றும் துரைப்பாண்டி (24) ஆகிய இருவரும் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை சுந்தரராஜன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, துரைப்பாண்டி ஆகிய இருவரும் சுந்தரராஜனை தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கள்ளிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேரை குளம் கிராமத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் இன்று காலிக்குடங்களுடன் வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவர் பிரமிளா ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 2 நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- புதிய ரெயில் சேவையால் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ரெயில் அறந்தாங்கி பகுதி மக்களின் விடியலுக்கான முன்னேற்றமான இருக்கும்.
நெல்லை:
நெல்லை-செங்கோட்டை ரெயில் வழித்தடம் நூற்றாண்டு கண்ட பாரம்பரியம் கொண்டதாகும்.
கடந்த 1,904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக தொடங்கப்பட்ட இந்த வழித்தடம் 21.9.2012-ம் ஆண்டு முதல் அகல ரெயில் பாதையாக இயங்கி வருகிறது.
நெல்லை-செங்கோட்டை மீட்டர் கேஜ் வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து 2 தினசரி ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன.
ஆனால் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த வழித்தடத்தில் இருந்து பகல் நேரத்தில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.
இதனை பூர்த்தி செய்யும் வகையில் தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ், அம்பை-பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தென்காசி மாவட்ட பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி வண்டி எண் 20683 தாம்பரம்-செங்கோட்டை ரெயில் இயக்கத்தை பிரதமர் மோடி சென்னையில் இருந்து இன்று தொடங்கி வைக்கிறார்.
தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 7.25 மணிக்கு வந்து சேரும். செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கு செல்லும். தொடக்க விழாவையொட்டி மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சேவை கிடையாது. வருகிற 16-ந் தேதி முதல் வழக்கமான ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.
இந்த ரெயில் ஏப்ரல், மே மாதங்களில் வாரம் ஒரு முறை ரெயிலாகவும், பின்னர் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என வாரம் 3 முறை இயக்கப்படும்.
இந்த ரெயில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய வழித்தடங்கள் வழியாக தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்கிறது.
இந்த ரெயிலில் 2 இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 5 தூங்கும் வசதி பெட்டிகள், 3 முன்பதிவில்லாத பெட்டிகள், 2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
தாம்பரம்-திருவாரூர் இடையே மின்சார என்ஜினிலும், திருவாருர்-செங்கோட்டை இடையே டீசல் என்ஜினிலும் இயக்கப்படும்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சீசன் நேரங்களில் குற்றாலத்திற்கு செல்லும் பயணிகள் இந்த ரெயில் மூலம் மிகவும் பயன் அடைவார்கள்.
தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிலீப்பர் வகை டிக்கெட் ரூ. 405, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 985, 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1,505-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிலீப்பர் கட்டணம் ரூ. 435, 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1060, 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1620-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் சேவை தென்காசி மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் தென்காசி மாவட்டத்தில் முக்கிய நிறுத்தமான கடையத்தில் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் கடையத்தில் நின்று செல்லும். நெல்லை, தென்காசி மார்க்கத்தில் முன்பதிவு அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ள கடையம் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் தாம்பரம்-செங்கோட்டை இடையே பயண நேரம் 13 மணி நேரம் 50 நிமிடம் ஆகும். இந்த பயண நேரத்தை குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும், மேலும் மானாமதுரை, அதிராம்பட்டிணம், சிதம்பரம், செங்கல்பட்டு நிறுத்தங்களிலும் இந்த ரெயில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணன் கூறும் போது, தாம்பரம்-செங்கோட்டை புதிய அதிவேக விரைவு ரெயிலால் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி மாவட்டங்கள் இடையே உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு எளிதில் சென்று வர வசதியாக இருக்கும்.
இந்த ரெயிலில் உள்ள ஏ.சி. பெட்டிகள் 2-ஐ குறைத்து 2-ம் வகுப்பு சிலீப்பர் பெட்டிகளாகவோ அல்லது சாதாரண இருக்கை பெட்டிகளாகவோ மாற்றினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்த ரெயில் இயக்கத்தை அறிவித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
இது குறித்து டெல்டா மாவட்ட பயணிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு,
தஞ்சையை சேர்ந்த காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலாளர்ஜீவக்குமார்:-
தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு வாராந்திர ரெயில் மூலம் டெல்டா மாவட்ட மக்கள் பயன் அடைவர்.
இங்கிருந்து தொழில் விஷயமாக வட தமிழகம், தென் தமிழகத்துக்கு தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். போதிய ரெயில் சேவை இல்லாத காரணத்தால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்சில் சென்று வந்தனர்.
தற்போது இன்று மாலை பிரதமர் மோடி தாம்பரம்-செங்கோட்டை புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் இனி பஸ்சை விட குறைந்த கட்டணத்தில் புதிய ரெயிலில் செல்லலாம். வாரம் 3 முறை இயக்கப்படும் ரெயிலை தினமும் இயக்க வேண்டும்.
கண்டிப்பாக பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அடுத்த மாதம் வரை இயக்கப்படும் என்பதை நிரந்தரமாக இயக்க வேண்டும்.
இருந்தாலும் தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவை டெல்டா மாவட்ட மக்களுக்கு மட்டுமில்லாது தென், வட தமிழக மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது என்றார்.
தாம்பரம்-செங்கோட்டை ரெயில் பல மாவட்டங்களை இணைக்கிறது. திருத்துறைப்பூண்டியில் இதுவரை இரண்டு ரெயில்கள் மட்டுமே இயங்கி வந்தன. தற்போது புதிய ரெயில் சேவையை இன்று மாலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதில் இரண்டு ரெயில்கள் திருத்துறைப்பூண்டி வழியாக செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. திருத்துறைப்பூண்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இங்கிருந்து சென்னையில் பலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து இதற்கு முன்னர் நேரடியாக எந்த ரெயிலும் இயக்கப்படாமல் இருந்ததால் சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால் திருவாரூர், மயிலாடுதுறைக்கு சென்று அங்கிருந்துதான் ரெயில் மூலம் செல்ல வேண்டும் . இதனால் கால விரயம் ஆனதோடு பலர் பஸ்ஸில் சென்று வந்தது.
தற்போது புதிய ரெயில் சேவையால் திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தென் மாவட்டமான தென்காசி குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லவும் புதிய ரெயில் சேவை வழி வகுத்துள்ளது. வாராந்திரமாக இயக்கப்படும் இந்த ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்றார்.
திருச்சி கோட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க உறுப்பினர் ராஜகுமார் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது, இதற்காக அறந்தாங்கி, பட்டுக்கோட்டை , பேராவூரணி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரெயில் சேவையை தொடங்க வலியுறுத்தி ரெயில்வே வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தோம், மேலும் திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியும், இரவில்வே வாரியத் தலைவரை சந்தித்தும் பேசினர். அதன் விளைவாக இன்று முதல் செங்கோட்டை ரெயில் இயக்கப்படுகிறது. அதனை பிரதமர் மோடி அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ரெயில் அறந்தாங்கி பகுதி மக்களின் விடியலுக்கான முன்னேற்றமான இருக்கும். மாணவ, மாணவிகள், வியாபாரிகள், சாமானிய மக்களின் பயணமும் வாழ்வாதாரமும் மேம்படும். அறந்தாங்கி பகுதி மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.
- முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.
- முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கூலித் தொழிலாளி.
இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (வயது 28). இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
தங்கராஜ் மனைவி இறந்து விட்டார். இதனால் அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழரசன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனால் மீண்டும் மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் தங்கராஜிக்கு வீட்டை எழுதிக் கொடுப்பதற்கு மறுத்த தமிழரசன், முத்துமாரி ஆகியோர் 2-வது திருமணம் செய்வதையும் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த தங்கராஜ் நேற்று காலை தமிழரசன் அங்குள்ள கடைக்கு செல்வதை பார்த்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென இரும்பு கம்பியால் முத்துமாரி தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று முத்து மாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்து மாரி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து, தங்கராஜ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, தப்பி ஓடிய தங்கராஜை தேடி வருகின்றனர்.
- முத்து மாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கராஜை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியை அடுத்த இட்டேரி கேபிரியேல் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி முத்துமாரி (வயது 28) என்ற மனைவியும், இரட்டை குழந்தைகளும் உள்ளனர். தங்கராஜ் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அவர் 2-வது திருமணம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழரசன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனால் மீண்டும் மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு செய்துள்ளார். ஆனால் தங்கராஜிக்கு வீட்டை எழுதிக் கொடுப்பதற்கு மறுத்த தமிழரசன், முத்துமாரி ஆகியோர் 2-வது திருமணம் செய்வதையும் கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த தங்கராஜ் இன்று காலை மகன் தமிழரசன் அங்குள்ள கடைக்கு செல்வதை பார்த்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென இரும்பு கம்பியால் முத்துமாரி தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் முத்துமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று முத்து மாரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தங்கராஜை தேடி வருகின்றனர்.
- தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
- கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
நெல்லை:
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நி னைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொள்வா ர்கள். தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்தவாரம் குருத்தோலை ஞாயிறு நடைபெற்றது.
இந்நிலையில் பெரிய வியாழனான நேற்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாள் புனித வெள்ளியாக கருத்தப்படுகிறது.
இன்று புனித வெள்ளியை யொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் சிலுவை ப்பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாளையங்கோட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபை தேவாலயங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மும்மணி ஆராதனை என்ற பிரார்த்தனையில் கிறிஸ்த வர்கள் உபவாசத்து டன் பங்கேற்றனர். கத்தோலிக்க தேவால யங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
பாளை தூய சவேரியார் தேவாலயம் சார்பில் சிலுவைப்பாதை வழிபாடு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதேபோல் சீவலப்பேரி, பேட்டை , திசையன்விளை, ராதாபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவலாயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள்( ஞாயிற்றுக்கிழமை) கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு கத்தோலிக்க ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரா ர்த்தனை நடைபெறுகிறது.
இதேபோல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நாளை மறுநாள் அதிகாலை ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடைபெறு கிறது. ஈஸ்டர் பண்டிகையை யொட்டி நாளை இரவு 11.30 மணிக்கு தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தலை தச்சை கணேசராஜா திறந்து வைத்தார்.
- பாளை பஸ் நிலையம் அருகே உள்ள சைக்கிள் மார்ட் எதிரிலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் இன்று சந்திப்பு தேவர் சிலை அருகே நீர்-மோர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு தண்ணீர், மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடாசலம், முன்னாள் பகுதி செயலா ளர் தச்சை மாதவன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணி யன், வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகி கள் கனித்துரை, பாறையடி மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாளை தெற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் திருத்துச் சின்னத்துரை ஏற்பாட்டில் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள சைக்கிள் மார்ட் எதிரிலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இளம்பெண் பாசறை முத்துப்பாண்டி, மண்டல தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, வட்ட செயலாளர்கள் ராமர், லட்சுமி நாராயணன், முத்துக்குமார், காதர் மஸ்தான், அருள் ஜெய்சிங், புதிய முத்து, பகுதி இணை செயலாளர் முத்துலட்சுமி, மகளிர் அணி பேச்சியம்மாள் மற்றும் நிர்வாகிகள் சண்முகநாதன், ஆனந்த் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.






