என் மலர்
திருநெல்வேலி
- பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை
- வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் பஸ்கள் வருவதே கிடையாது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நெல்லையின் புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் சென்று வருகிறது. செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பஸ்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்றும் பிற்பகலில் இந்த பஸ்கள் வரவில்லை. இதனால் அந்த பஸ்சுக்காக காத்திருந்த ஏராளமான பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இது தொடர்பாக ஆத்தூர் பயணிகள் கூறியதாவது:-
நாங்கள் ஆத்தூரில் இருந்து பல்வேறு காரணங்களுக்கு நெல்லைக்கு காலையில் வருவோம். பின்னர் எங்கள் பணிகள் முடிந்த பின்னர் மதியம் மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு செல்லும் பஸ்சில் புறப்பட்டு செல்வோம். அந்த பஸ்சை விட்டால் அதன்பின்னர் 1.15 மணிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஆத்தூர் செல்வோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த 2 பஸ்களும் சரிவர இயக்கப்படவில்லை.
குறிப்பாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் வருவதே கிடையாது. இது குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை. மதியம் 12 மணிக்கு புதிய பஸ் நிலையம் வந்தால் இந்த 2 பஸ்களும் வராததால் அங்கேயே கால்கடுக்க காத்திருந்து அடுத்து 2.30 மணிக்கு ஆத்தூர் செல்லும் பஸ்சில்தான் செல்ல வேண்டி உள்ளது.
சில நேரங்களில் அந்த பஸ்சும் வராது. இதனால் மாலை 4 மணிக்கு செல்லும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு செல்வோம். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி, முன்பு போல 12.30 மற்றும் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை சீரான முறையில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார்.
- கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பை போலீஸ் நிலையங்களிலும் நேரடியாக சென்று விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா நேற்று நெல்லை வந்தார். தொடர்ந்து கலெக்டரிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பின்னர் நேற்று மாலையில் அதிகாரி அமுதா, தனது விசாரணையை தொடங்கினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சப்-கலெக்டரிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் ஒரு சிலர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி நடந்தவற்றை கூறினர். அதனை அவர் பதிவு செய்து கொண்டார்.
இதனையொட்டி தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவு இழுத்து பூட்டப்பட்டது. போலீசார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து விசாரணை அதிகாரி அமுதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்கள், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீசார் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளார்.
அதேபோல் கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பை போலீஸ் நிலையங்களிலும் நேரடியாக சென்று விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- அதிகபட்சமாக செங்கோட்டையில் 43.4 மில்லி மீட்டரும், தென்காசியில் 42 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 35 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
- ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரியை தாண்டி கடும் வெயில் அடித்து வந்தது. அதிக வெப்பம் நிலவியதால் பகலில் சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாளை, வண்ணார்பேட்டை, மகிழ்ச்சி நகர், கிருஷ்ணாபுரம், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட மாநகர பகுதிகள் மட்டுமின்றி மானூர், கீழ பாப்பாக்குடி, மன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்தது.
ஏர்வாடி பகுதியில் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.
எப்போதும் தண்ணீர் விழும் என்ற சிறப்பை பெற்ற அகஸ்தியர் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. அங்கு இன்று ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக செங்கோட்டையில் 43.4 மில்லி மீட்டரும், தென்காசியில் 42 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 35 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
இதே போல் ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இன்று காலை தென்காசி மாவட்டத்தில் வெயில் இன்றி மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குற்றாலத்தின் பிரதான அருவியான மெயினருவி, ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. இதே போல் பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்டவைகளிலும் குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது.
விடுமுறை தினமான நேற்று குற்றால அருவிகளில் அதிகரித்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று குறைந்த அளவே இருந்தது.
- நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடினர்.
- இச்சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழரசன் ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்து வருகிறார்.
- முத்துமாரியை இரும்பு கம்பியால் தங்கராஜ் சரமாரியாக தாக்கினார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது60), தொழிலாளி. இவரது மகன் தமிழரசன் ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி முத்துமாரி (28).
2-வது திருமணத்திற்கு முயற்சி
தங்கராஜின் மனைவி இறந்து விட்டதால் 2-வது திருமணத்திற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். அவரிடம் வீட்டை தனது பெயரில் எழுதி கேட்டு தங்கராஜ் தகராறு செய்து வந்தார்.
மேலும் தமிழரசன், முத்துமாரி ஆகியோர் சேர்ந்து தங்கராஜ் 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று கண்டித்தனர். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.
கொலை
நேற்று முன்தினம் தமிழரசன் கடைக்கு சென்ற நேரத்தில் தங்கராஜ் வீட்டுக்கு சென்று முத்து மாரியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து தப்பியோடிய தங்கராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.
உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
இதற்கிடையே முத்துமாரி உடல் பிரேத பரிசோதனைக்காக ஐகிரவு ண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரண்ட அவரது உறவி னர்கள், தங்கராஜை போலீ சார் கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் தில்லை நாக ராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து முத்துமாரியின் உறவினர்கள் இன்றும் போ ராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.
- தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும்.
- இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நெல்லை:
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது.
தவக்காலத்தில் தவக்கால நடைபயணம், சிறப்பு தியானம், திருப்பயணம், சிலுவை பயணம் உள்ளிட்டவைகளை மேற்கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படும். அத வகையில் கடந்த 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து 6-ந் தேதி பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல், நேற்று முன்தினம் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறை யப்பட்டதை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் 3நாட்களுக்கு பின்னர் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடு கின்றனர். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நெல்லை
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாளை தெற்கு பஜாரில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு 12 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி இயேசுவின் உயிர்தெழுதலை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு இயேசு உயிர்ப்பித்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.
இது போன்று பாளை தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி சாலை புனித அந்தோணியார் தேவாலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகர் குழந்தை ஏசு தேவாலயம், உடையார்பட்டி இயேசுவின் திருஇருதய ஆலயம்,
நெல்லை டவுன் அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி.நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோணியார் தேவாலயம், சேவியர்காலனி தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட மாநகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மேலும் திசையன்விளை, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ராதாபுரம், வள்ளியூர், களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பொறுப்பாளர்கள் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
வண்ணார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் விண்ணப்பங்களை பகுதி செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்களிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பொறுப்பாளர்கள் கல்லூர் வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடா சலம் ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள், சங்க நகர் பேரூர் செயலாளர் சங்கர்,
நாரணம்மாள்புரம் பேரூர் செயலாளர் செல்ல பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், டவுன் கூட்டுறவு சங்க தலைவர் பால்கண்ணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் ஆறுமுகம் என்ற கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாகனங்கள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மதன் ஸ்டாலின் களக்காடு போலீசில் புகார் செய்தார்.
- திருட்டில் ஈடுபட்ட முப்பிடாதி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் மதன் ஸ்டாலின் (வயது45). விவசாயி. நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பத்மநேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அவரது நண்பரான கேசவநேரியை சேர்ந்த சண்முகவேல் மொபட்டில் வந்தார். இருவரும் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை நிறுத்தி விட்டு, சிறிது தூரம் சென்று பேசிக் கொண்டிருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் மற்றும் மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள், மொபட்டை திருடி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மதன் ஸ்டாலின் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி, சப்-இன்ஸ் பெக்டர் இசக்கி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் இருசக்கர வாகனத்தை திருடியது, கீழதேவநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணன், தம்பிகளான முப்பிடாதி (23), இசக்கிபாண்டி (22), கல்லிடைகுறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தை சேர்ந்த மாடசாமி என்ற மகேஷ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
- ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.
களக்காடு:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் களக்காடு டி.கே.எஸ். மண்டபத்தில் மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை யில் நடந்தது. மாவட்ட பொருளாளர் டாக்டர் பால் ராஜ் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர் கேபிகே.ஜெயக்குமார், ராகுல்காந்தி எம்.பி.யின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வருகிற 15-ந்தேதி நாங்குநேரியில் ரெயில் மறியல் போராட்டமும், வருகிற 20-ந்தேதி ஏர்வாடி யில் தலைமை தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து களக்காடு மெயின் ரோட்டில் காங்கிரஸ் தலைவர்கள் ஊர்வலமாக சென்று ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பொது மக்களிடம்துண்டு பிரசுரம் வழங்கினர்.பின்னர் காமராஜர், இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
பின்னர் மாவடி சந்திப்பில் காமராஜர் படத் திற்கு மாலை அணிவித்து தண்ணீர் பந்தல் திறக்கப் பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமார ராஜா, கிருஷ்ண குமார், தொகுதி பொறுப் பாளர் சசிகுமார், பொதுக் குழு உறுப்பினர் ஜார்ஜ், வள்ளியூர் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தனராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் செல்வராஜ், ஆறுமுகம், பொறியாளர் அணி தலைவர் தர்மலிங்கம், வட்டார தலைவர்கள் முருகன், அருள்தாஸ், முத்து கிருஷ்ணன், பாலசுப்பிர மணியன், பிராங் கிளின், ராமச்சந்திரன், நகர தலை வர்கள், களக்காடு ஜெபஸ்டின் ராஜ், சுடலைக்கண்ணு, பொன் ராஜ், அபுபக்கர்,
ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் மருதூர்-மணிமாறன், சுரேஷ்பாபு, ராஜாபுதூர் காமராஜ், களக்காடு கவுன்சிலர் சின்சான் துரை, களக்காடு பால்சால மோன், முத்துக் குட்டி, செல்வராஜ், மேல பெத்த செல்வராஜ் விக்டர், பிரேம் ராஜ்குமார், வாசு, முன்னாள் நகர தலைவர் சேகர், ஜெயபாண்டி, பொன்ராஜ், மனித உரிமை பிரிவு அந்தோணிராஜ், ராபர்ட் சுஜின், மாவடி செல்லப்பாண்டி ஜான்சன், ராபின் டோனாவூர்.. ஜெயக்குமார், நவநீதன், மனோகரன், ரமேஷ். ஐசக் அற்புதராஜ், கோசல்ராம், வில்லுப்பாட்டு முத்து, மகளிர் காங்கிரஸ் பிரியா, முருகன், அன்ன கவுரி, ஜெபசுதா மற்றும் களக்காடு நகராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் களக்காடு இந்திரா காந்தி சிலைகள் மாவடி பஸ் நிறுத்தம் அருகிலும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மோர் பந்தல் மாவட்டத் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு திறந்து வைத்தார்.
- பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியின்போது பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை வடக்கு மாவட்ட பா. ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், முத்து பலவேசம், வேல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பட்டியல்அணி மாநில துணைத்தலைவர் பொன்ராஜ், தச்சை மண்டல தலைவர் பிரேம்குமார், ஊடகப்பிரிவு முத்து, வர்த்தக அணி குரு மகாராஜன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
- பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
- இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை நெல்லை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, சேர்வலாறு உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே நெல்லை மாநகர பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 10 மணிக்கு மேல் பாளை, பெரு மாள்புரம், வண்ணார்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
இதேபோல் இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்திலும் தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்தது. குற்றாலம் பிரதான அருவியான மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் திரண்டனர். அவர்கள் வரிசையில் நின்று அருவியில் குளித்து சென்றனர்.
- காயத்ரி அம்பை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- காயத்ரி சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் ராஜா நகரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் காயத்ரி அம்பை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் காயத்ரி சரியாக படிக்கவில்லை என்று கூறி நேற்று அவரை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்ட காயத்திரி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






