என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கல்லிடைக்குறிச்சி அருகே பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை
  X

  கல்லிடைக்குறிச்சி அருகே பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காயத்ரி அம்பை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
  • காயத்ரி சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.

  கல்லிடைக்குறிச்சி:

  நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் ராஜா நகரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் காயத்ரி அம்பை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

  இந்நிலையில் காயத்ரி சரியாக படிக்கவில்லை என்று கூறி நேற்று அவரை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்ட காயத்திரி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×