search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tachai Ganesaraja"

    • அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பொறுப்பாளர்கள் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைக்க விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.

    வண்ணார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோர் விண்ணப்பங்களை பகுதி செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்களிடம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை தொகுதி பொறுப்பாளர்கள் கல்லூர் வேலாயுதம், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடா சலம் ஒன்றிய செயலாளர்கள் மருதூர் ராமசுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள், சங்க நகர் பேரூர் செயலாளர் சங்கர்,

    நாரணம்மாள்புரம் பேரூர் செயலாளர் செல்ல பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், டவுன் கூட்டுறவு சங்க தலைவர் பால்கண்ணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் ஆறுமுகம் என்ற கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்
    • ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க வீட்டுவரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×