search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல்கள் திறப்பு
    X

    நெல்லை சந்திப்பில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கிய காட்சி.

    நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல்கள் திறப்பு

    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தலை தச்சை கணேசராஜா திறந்து வைத்தார்.
    • பாளை பஸ் நிலையம் அருகே உள்ள சைக்கிள் மார்ட் எதிரிலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் இன்று சந்திப்பு தேவர் சிலை அருகே நீர்-மோர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு தண்ணீர், மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடாசலம், முன்னாள் பகுதி செயலா ளர் தச்சை மாதவன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணி யன், வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகி கள் கனித்துரை, பாறையடி மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை தெற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் திருத்துச் சின்னத்துரை ஏற்பாட்டில் பாளை பஸ் நிலையம் அருகே உள்ள சைக்கிள் மார்ட் எதிரிலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரேயும் நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் இளம்பெண் பாசறை முத்துப்பாண்டி, மண்டல தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, வட்ட செயலாளர்கள் ராமர், லட்சுமி நாராயணன், முத்துக்குமார், காதர் மஸ்தான், அருள் ஜெய்சிங், புதிய முத்து, பகுதி இணை செயலாளர் முத்துலட்சுமி, மகளிர் அணி பேச்சியம்மாள் மற்றும் நிர்வாகிகள் சண்முகநாதன், ஆனந்த் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×