என் மலர்
நீங்கள் தேடியது "Patra Kaliamman Kovil"
- விழாவையொட்டி நாளை மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்.
- 11-ந் தேதி காலை பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லை:
நெல்லை டவுன் மேல குன்னத்தூரில் ஞானம்மாள் கட்டளை நாடார் சமுதா யத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து 10 மற்றும் 11-ந்தேதிகளில் கோவில் கொடை விழா நடக்கிறது.
விழாவையொட்டி நாளை மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெறும். மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கும்பம் ஏற்றுதல், தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சிக்கு பின்னர் நள்ளிரவில் சாஸ்தா சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். கடைசி நாளான வருகிற 11-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை குன்னத்தூர் கஸ்பா அரசடி பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதலும், மதிய கொடையும் அதன் பின்னர் அன்னதானமும் நடைபெறும். மாலையில் கருப்பந்துறை விளாகம் தாமிரபரணி ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வருதலும், அலங்கார தீபாராதனையும் நடைபெறும். முடிவில் சாம கொடையுடன் கோவில் திருவிழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






