என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
வள்ளியூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
- நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
- மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வள்ளியூர்:
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக வள்ளியூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறி யாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் வளன்அரசு மற்றும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் முடிந்த வுடன் வள்ளியூர் கோட்டத்தில் அனைத்து பிரிவு அலுவல கத்திலும் தொடர்ச்சியாக பாதுகாப்பு வகுப்புகள் நடத்தி பணியாளர்கள் பாதுகாப்பு நெறி முறைகளுடன் பணிபுரிய உத்தரவிட்டார்.
மாணவ -மாணவி களுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால், கோடை காலத்தில் ஏற்படும் திடீர் சூறைக்காற்று மழை இடி, மின்னல் காரணமாக இயற்கை இடர்பாடுகளால் மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவத ற்கும், தவிர்க்க இயலாத நேர த்தில் அனை வரும் ஒருங்கி ணைந்து பணி யாற்றி மின் வினி யோகம் விரை வில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.






