என் மலர்
திருநெல்வேலி
- சிவராமன் பணியை முடித்துவிட்டு ஆலடியூர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர் வந்து நிற்கவும், அவரை 5 பேர் கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது.
- எனினும் சிவராமன் அங்கிருந்து வேகமாக சென்று அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மயங்கி விழுந்தார்.
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த கோட்டாரங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் செல்வா என்ற சிவராமன்(வயது 25) தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வருகிறார்.
இவர்களது குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினரான சுடலைமுத்து என்பவரது குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
நேற்று வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்ற சிவராமன் மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை சுடலைமுத்துவின் மகன் உலகநாதன் என்ற சங்கர் செல்போனில் அழைத்துள்ளார். இடப்பிரச்சினை தொடர்பாக சமரசம் பேசுவோம் என்றும், உடனடியாக வி.கே.புரம் அருகே ஆலடியூரை சேர்ந்த கல்குவாரி அருகில் வருமாறும் கூறி அழைத்துள்ளார்.
அதனை நம்பிய சிவராமன் பணியை முடித்துவிட்டு ஆலடியூர் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர் வந்து நிற்கவும், அவரை 5 பேர் கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. உடனே சுதாரித்துக் கொண்ட சிவராமன் மோட்டார் சைக்கிளை திருப்பி தப்பிச்செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓடிச்சென்று வெட்டியதில் அவரது பின்பக்க தலையில் பலத்தக்காயம் ஏற்பட்டது.
எனினும் சிவராமன் அங்கிருந்து வேகமாக சென்று அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அம்பை சரக பகுதியில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார்.
- விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். சமர்ப்பித்த அறிக்கையின் அடிப் படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இந்நிலையில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். சமர்ப்பித்த அறிக்கையின் அடிப் படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ் பெக்டர் உலக ராணி நியமி க்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று அனைத்து கோப்புகளையும் பெற்றுக் கொண்டார்.
குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன் ரகு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி உலக ராணியிடம் ஒப்படைத்தார். இதனை யடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழு இன்று முதலே தொடங்கியது.
- மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
- 21 ஆயிரத்து 932 பயனாளிகளுக்கு தென்னங்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பாளை ஜவஹர் திடல் அருகே உள்ள மாநகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட விவசாயிகள் நடப்பு பிசான பருவத்தில் பயன்பெறும் வகையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 601 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 47 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரத்து 478 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டுள்ளது.
மண்வளத்தை மேம்படு த்திட குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க 251 குளங்கள் தேர்வு செய்ய ப்பட்டு அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மாவட்டத்தில் 56 கிராம பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ. 62.02 லட்சம் மதிப்பில் 21 ஆயிரத்து 932 பயனாளி களுக்கு தென்னங்கன்று, விசை, தெளிப்பான், தார்பாய் உள்ளிட்டவை வழங்கப்ப ட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஓராண்டு சராசரி மழை அளவு 814.8 மில்லி மீட்டர் ஆகும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை 181.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 71.88 மில்லிமீட்டர் மழையே பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறு ப்பு) சுகன்யா, வேளாண் இணை இயக்குநர் முருகா னந்தம், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசாயம்) கிருஷ்ண குமார், தோட்ட க்கலை துறை துணை இயக்கு னர் பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- வாரந்தோறும் சனிக்கிழமை மாநகர பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் நாளை விடுமுறையை ஒட்டி முன்னதாகவே இன்று நடத்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
நெல்லை:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமை மாநகர பகுதி யை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் நாளை விடுமுறையை ஒட்டி முன்னதாகவே இன்று நடத்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மண்டலத்தில் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியானது சாலை தெரு, தொண்டர் நயினார் சன்னதி சாலைகளில் நடைபெற்றது. அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. இதில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் முத்துராஜ், மனோஜ், மாரியப்பன், மேஸ்திரி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆழ்வாநேரி, புதுக்குறிச்சியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 55). இவருக்கு பலவேசம் என்ற மனைவியும், இந்து என்ற மகளும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், அவரது மனைவி பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பலவேசம், கணவரை பிரிந்து, தனது மகன், மகளு டன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங் குறிச்சிக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதால் சுடலை முத்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே கடந்த 19-ந் தேதி சுடலைமுத்து மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.
இந்நிலையில் மூன்றடைப்பு அருகே உள்ள தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்ப தாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான சுடலைமுத்து என்பதும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி. யூ. சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் லட்சுமணன் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. துணைத் தலைவர் ரங்கன், மாநில குழு உறுப்பினர் முருகன், செயலாளர் முத்துகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் உலகநாதன், சேதுராமலிங்கம், மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
- நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். கோடைகாலம் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் ஏற்படும் திடீர் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாலை 6 மணிக்கு மேல் மின் நுகர்வு அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து அதிகாரிகளும் தொடர் கண்காணிப்பில் இருக்கவும் தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்கவும் உத்தரவிட்டார்.
- அன்னலட்சுமி ஒரு மகளிர் சுய உதவி குழுவில் தலைவியாக உள்ளார்.
- ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அன்னலட்சுமியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் ஆரைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 55). இவர் ஒரு மகளிர் சுய உதவி குழுவில் தலைவியாக உள்ளார்.
நேற்று சுய உதவி குழு உறுப்பினர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கொண்டு அடைமிதிப்பான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அன்னலட்சுமியிடம் வழி கேட்பது போல் நடித்து அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அந்த பையில் ரூ.21 ஆயிரம் பணம் இருந்தது. இதுகுறித்து அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பணத்தை பறித்து சென்ற நபர்களை தேடி வருகிறார்கள்.
- ஜான்சன் பழைய இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருகிறார்.
- கடையில் திருடியது ஜெயசெல்வன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி, கீழத்தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 43). இவர் மலையடிபுதூர் ஊருக்கு அருகே பழைய இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந்தேதி இரவில் ஜான்சன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவில் மர்மநபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ரூ. 7ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் மற்றும் செம்பு கம்பிகளை திருடி சென்று விட்டார். மறுநாள் காலையில் கடைக்கு வந்த ஜான்சன் கடை உடைக்கப்பட்டு, கம்பிகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இதில் கடையில் திருடியது மேலமாவடி, நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் ஜெயசெல்வன் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கம்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார்.
- விஷம் குடித்த நிஷாந்த் மயங்கி விழுந்தார்.
களக்காடு:
ஏர்வாடி ரஸ்தா, சேனையர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). இவரது மனைவி அம்பிகா (44). செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தியபடி இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அம்பிகாவின் பராமரிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார். அப்போது ஆத்திரத்தில் அவரது மகன் நிஷாந்த் (19) அவரை தாக்கினார். இதையடுத்து தந்தையை தாக்கி விட்டோமே என்று நிஷாந்த் மனம் உடைந்து காணப்பட்டார்.
இதற்கிடையே கடந்த 19-ந் தேதி நண்பர்களை பார்க்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற நிஷாந்த் விஷம் குடித்தபடி வீட்டிற்கு திரும்பி வந்து, மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- மாரியப்பன் வழி கூறுவது போல நடித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவும் அங்கிருந்த பொதுமக்கள் மாரியப்பனை மடக்கி பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லை:
தர்மபுரியை சேர்ந்த 22 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி நெல்லைக்கு ரெயிலில் வந்தார்.
அவர் பல்கலைக்கழகம் செல்வது குறித்து நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த மாரியப்பன் (வயது 48) என்ற தொழிலாளியிடம் வழி கேட்டுள்ளார்.
அப்போது மாரியப்பன் வழி கூறுவது போல நடித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தப்பியோடிய போது கீழே விழுந்துள்ளார். அப்போது மாணவியை தூக்கி விடுவது போல நடித்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போடவும் அங்கிருந்த பொதுமக்கள் மாரியப்பனை மடக்கி பிடித்து சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நெல்லை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி கவிபிரியா தீர்ப்பு கூறினார். அப்போது மாரியப்பனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அவர் தீர்ப்பளித்தார்.
+3
- நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
- சந்திப்பில் இருந்து அறிவியல் மையம் சாலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அணிவகுத்து நின்றது.
நெல்லை:
நெல்லை வண்ணா ர்பேட்டை கொக்கிரகுளம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
தனியார் பஸ் மோதல்
இன்று பிற்பகல் 11 மணிக்கு தனியார் பஸ் ஒன்று வண்ணார்பேட்டை யில் இருந்து சந்திப்பு நோக்கி சென்றது. அந்த பஸ் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவின் கண்ணாடிகள் மற்றும் தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் ஆட்டோ டிரைவர், தனியார் பஸ் டிரைவர் மற்றும் தனியார் பஸ்சின் முன்பக்கம் இருந்த பயணிகள் இருந்த சுமார் 10 பேர் காயமடைந்தனர். பின்னர் அந்த ஆட்டோ முன்னாள் சென்ற அரசு பஸ் மீதும், அரசு பஸ் அதற்கு முன்னதாக சென்ற ஒரு கார் மீதும் மோதியது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இந்த விபத்தில் அரசு பஸ் மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. உடனடியாக அங்கு இருந்த போக்குவரத்து காவலர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் 30 நிமிடத்திற்கு மேலாக ஆம்புலன்சு வராததால் காயமடைந்த வர்கள் சாலையோரம் இருக்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து தனியார் ஆம்பு லன்சு வரவழைக்கப்பட்டு காயமடைந்த வர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவத்தால் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதியில் இருந்து கொக்கிரகுளம் வரையிலும் நூற்றுக்கணக்கான வாக னங்கள் அணிவகுத்து நின்றது.
மேலும் சந்திப்பில் இருந்து அறிவியல் மையம் சாலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் டிரைவரை பொதுமக்கள் சூழ்ந்து அவரை தாக்கினர். பின்னர் அவரை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இது தொடர்பாக பயணிகள் கூறும்போது, தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநகர பகுதிகளில் அதிவிரைவாக சென்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட இந்த தனியார் நிறுவனத்தின் பஸ்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவ ர்கள் கோரிக்கை விடுத்தனர்.






