search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Kokrakulam"

    • நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
    • சந்திப்பில் இருந்து அறிவியல் மையம் சாலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அணிவகுத்து நின்றது.

    நெல்லை:

    நெல்லை வண்ணா ர்பேட்டை கொக்கிரகுளம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    தனியார் பஸ் மோதல்

    இன்று பிற்பகல் 11 மணிக்கு தனியார் பஸ் ஒன்று வண்ணார்பேட்டை யில் இருந்து சந்திப்பு நோக்கி சென்றது. அந்த பஸ் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஆட்டோவின் கண்ணாடிகள் மற்றும் தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் ஆட்டோ டிரைவர், தனியார் பஸ் டிரைவர் மற்றும் தனியார் பஸ்சின் முன்பக்கம் இருந்த பயணிகள் இருந்த சுமார் 10 பேர் காயமடைந்தனர். பின்னர் அந்த ஆட்டோ முன்னாள் சென்ற அரசு பஸ் மீதும், அரசு பஸ் அதற்கு முன்னதாக சென்ற ஒரு கார் மீதும் மோதியது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    இந்த விபத்தில் அரசு பஸ் மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. உடனடியாக அங்கு இருந்த போக்குவரத்து காவலர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் 30 நிமிடத்திற்கு மேலாக ஆம்புலன்சு வராததால் காயமடைந்த வர்கள் சாலையோரம் இருக்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து தனியார் ஆம்பு லன்சு வரவழைக்கப்பட்டு காயமடைந்த வர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது.

    போக்குவரத்து பாதிப்பு

    இந்த சம்பவத்தால் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதியில் இருந்து கொக்கிரகுளம் வரையிலும் நூற்றுக்கணக்கான வாக னங்கள் அணிவகுத்து நின்றது.

    மேலும் சந்திப்பில் இருந்து அறிவியல் மையம் சாலை நோக்கி செல்ல வேண்டிய வாகனங்களும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.

    இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் டிரைவரை பொதுமக்கள் சூழ்ந்து அவரை தாக்கினர். பின்னர் அவரை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    இது தொடர்பாக பயணிகள் கூறும்போது, தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநகர பகுதிகளில் அதிவிரைவாக சென்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட இந்த தனியார் நிறுவனத்தின் பஸ்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவ ர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×