என் மலர்
திருநெல்வேலி
- ஹெப்ரோன் பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.
- விழா ஏற்பாடுகளை தாளாளர் எபனேசர் பால்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹெப்ரோன் மேல்நிலைப்பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சிமணியரசு, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார், பள்ளியின் முன்னாள் மாணவர் அலெக்ஸ்ராய் ஜெயவெஸ்லி, டாக்டர் பில்லி ஜோசப், டாக்டர் திலீப் குமார், டாக்டர் லியா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் எபனேசர் பால்ராஜ், முதல்வர் விஜயா எபனேசர் மற்றும் அறங்காவலர்கள் சாமுவேல்ராஜ், ஜாய்ஸ் தேவநேசம் ஆகியோர் செய்திருந்தனர்.
- ராணி கணவரை பிரிந்து ஏர்வாடி அருகே வசித்து வருகிறார்.
- சுடலியம்மாளுக்கும், ஆசீர் பால்ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
வள்ளியூர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் நியூட்டன் மகன் ஆசீர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி ராணி. இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
முன்விரோதம்
இதனால் ராணி கணவரை பிரிந்து, ஏர்வாடி அருகே உள்ள சமாதான புரம், காருண்யா நகரில் வசித்து வருகிறார். ஆசீர் பால்ராஜ், ராணி வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
இதனை ராணி அதே தெருவில் வசிக்கும் பழனி மனைவி சுடலியம்மாளிடம் (48) கூறினார். இதையடுத்து சுடலியம்மாள், இதுகுறித்து ஆசீர் பால்ராஜை தட்டிக்கேட்டார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சுடலியம்மா ளுக்கும், ஆசீர் பால் ராஜ்க்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
கத்திக்குத்து
இந்நிலையில் நேற்று ராணியும், சுடலியம்மாளும் அங்குள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த ஆசீர்பால்ராஜ், சுடலியம்மாளை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆசீர் பால் ராஜை கைது செய்தனர்.
- கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்தது.
- விவசாயிகள் கடன் பெற்றுத்தான் வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் உள்ள கருநீலங்குளம், மஞ்சுவிளை, பத்மநேரி, மேலபத்தை, கீழபத்தை, பெருமாள்குளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த திடீர் கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து இருக்கிறார்கள்.
பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்றுத் தான் இந்த வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், வாழை மரங்கள் தற்போது சேதம் அடைந்திருப்பதால், அவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அதனால், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
- மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த இரும்பு மின்கம்பத்தில் பமோதியது. விபத்தில் 2 பேரும் சாலையோர முட்புதருக்குள் தூக்கி வீசப்பட்டனர்.
- உயிரிழந்த 2 பேரும் எங்கு சென்று வந்தார்கள்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் மீகா விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை:
பாளை கோட்டூர்புரம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் சர்க்கார்(வயது 41). அதேபகுதியை சேர்ந்தவர் கணேசன்(35). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு பாளை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளனர்.
பாளை பெரியபாளையம்-கோட்டூர் சாலையில் தனியார் ரைஸ்மில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த இரும்பு மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சாலையோர முட்புதருக்குள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அவர்களை யாரும் பார்க்கவில்லை. சிறிது நேரத்திலேயே 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சாலையில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்து கிடப்பதையும், முட்புதருக்குள் 2 பேரும் இறந்து கிடப்பதையும் பார்த்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் மீகா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 2 பேரும் எங்கு சென்று வந்தார்கள்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் மீகா விசாரணை நடத்தி வருகிறார்.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது.
- தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.
சிங்கை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறட்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
வழக்கமாக மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 814 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் வரை 181 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் சுமார் 72 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதிலும் சுமார் 10 அடி வரையிலும் சகதி தான் இருக்கும் என்பதால் வறட்சியின் பிடியில் அணை சிக்கியுள்ளது. தற்போது அணையானது குட்டை போல் காட்சியளிக்கிறது.
தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 73.40 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் மொத்தம் 5,511 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும்.
ஆனால் இன்று நிலவரப்படி அந்த அணையில் 1756 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.
+4
- பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
- மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நெல்லை:
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
20 இடங்களில் தொழுகை
நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே பள்ளிவாசல்களில் திரளான இஸ்லாமியர்கள் திரண்டனர். பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை மதீனா சி.பி.எஸ்.இ. பள்ளி திடலில் நடைபெற்றது.
பள்ளி வாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரை ஆற்றினார்.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு, பசித்தோருக்கு உணவ ளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோ தரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாக பற்றி பிடித்திடுவோம்.
புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை உட்கொண்டு, உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்று தெரிவித்தார்.
இந்த தொழுகையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி , ஜவஹர், தாவுத் ஹாஜியார்,முஸ்தபா, ஜெய்னுல் ஆபிதீன்,கட்சி நிர்வாகிகள் கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்நெல்லை மேலப்பாளையம் ஈத்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றம் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பத்தமடை உள்பட ஏராளமான இடங்களில் திறந்த வெளிகளிலும், பள்ளி வாசல்களிலும் காலையில் தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமா றிக்கொண்டனர். மேலும் அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது வாழ்த்து க்களை தெரிவித்துக் கொண்டனர்.
- அட்சய திருதியையொட்டி இன்று காலை தனாகர்ஷண குபேர மகா லெட்சுமி ஹோமம் நடந்தது.
- பக்தர்கள் தங்களது நகைகளை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்து எடுத்து சென்றனர்.
நெல்லை:
தமிழகத்தில் குபேர லிங்கம் அமைந்துள்ள 3 சிவன் கோவில்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆகும். தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுவாமி நெல்லையப்பர் சன்னதி செல்லும் 2-வது பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய குபேரலிங்கம் சன்னதி உள்ளது.
அட்சய திருதியை
இங்கு அட்சய திருதியையொட்டி இன்று காலை தனாகர்ஷண குபேர மகா லெட்சுமி ஹோமம் நடந்தது. தொ டர்ந்து குபேர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நகைகளை சுவாமி முன்பு வைத்து பூஜை செய்து எடுத்து சென்றனர்.
இதில் குபேர லிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை கட்டணமாக ரூ.150 செலுத்தியவர்களுக்கு அர்ச்சனை பிரசாதமாக குபேர மகாலட்சுமி நாணயம், குபேர மகா லட்சுமி ஐஸ்வரேஸ்வரர் படம், பஞ்சமுக ருத்ராட்சம், சிகப்பு கயிறு, தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் கயிறு, சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்ட விபூதி, குங்குமம், திருமாங்கல்ய கயிறு ஆகியவை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
- வருகிற 6, 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
- சிறப்பு பஸ்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடை விடுமுறையையொட்டி நவதிருப்பதி மற்றும் நவ கைலாய தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற மே மாதம் சனிக்கிழமை தோறும் நவதிருப்பதி, ஞாயிற்றுக்கிழமை தோறும் நவ கைலாய கோவில்களுக்கு செல்வதற்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி நவ திருப்பதி தலங்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, கருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் மற்றும் ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு வருகிற 6, 13, 20 மற்றும் 27-ந்தேதிகளில் புதிய பஸ் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நவகைலாய கோவில்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடக நல்லூர், முறப்பநாடு, குன்னத்தூர், ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, சேர்ந்த பூமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கு வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ள பஸ்களுக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாகவும், இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போக்கு வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்துஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வழிகாட்டு ஆலோசனை சிறப்பு முகாம் வருகிற 29-ந் தேதியும் நடைபெற உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2023-24-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் குறித்து தன்னார்வ இயக்கத்தால் தொழில் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு ஆலோசனைகள் வழங்க வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற்றது. இதேபோல் இந்த வழிகாட்டு ஆலோசனை சிறப்பு முகாம் வருகிற 29-ந் தேதியும் ( சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தெற்கு பாலபாக்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 10-ந் தேதி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
- தமிழ்வாணன், மணிகண்டன் என்ற ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 10-ந் தேதி மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து லட்சுமணன் (வயது 69) என்பவர் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வாதிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியது மூன்றடைப்பை சேர்ந்த தமிழ்வாணன் (29) மற்றும் வல்லநாட்டை சேர்ந்த மணிகண்டன் என்ற ராஜேஷ் என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரு குடும்பத்தில் 2 பேர் கலந்து கொள்ள தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
- இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நெல்லை:
உலக புவி தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை 'பூமியின் எதிர்கால பாதுகாப்பிற்கான முதலீடு' என்ற தலைப்பில் குடும்ப ரங்கோலி வரைதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குடும்பத்தினர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்தனர்.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரு குடும்பத்தில் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்குள் படிக்கும் ஒருவர் மற்றும் அவரது பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி இவர்களில் யாரேனும் ஒருவர் என 2 பேர் கலந்து கொள்ள தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் அறிவியல் மையத்துக்கு வந்து போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறந்த ரங்கோலிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய அலுவலர் குமார் மற்றும் கல்வி அலுவலர் லெனின் ஆகியோர் செய்து இருந்தார்.
- அரசு பஸ்கள் அனைத்து ஊர்களுக்கும் தடையின்றி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்
- நாகர்கோவிலில் இருந்து டி.எல்.எக்ஸ். என்ற பெயரில் 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வள்ளியூர்:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மாவட்ட தலைவர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் ஆசாத், மாவட்ட பொருளாளர் ராஜன் ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல நிர்வாக இயக்குனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-
மதுரை மண்டலத்தை சேர்ந்த மதுரை பஸ்கள் 18, ஏ.சி. வகை பஸ்கள் 3, விருதுநகர் டெப்போ பஸ் 1, பழனி டெப்போ பஸ் 2, குமுளி டெப்போ 3, திண்டுகல் டெப்போ 2, போடி டெப்போ 2 ஆக 31 பஸ்கள் நாகர்கோவிலுக்கு செல்கின்றன.
இந்த அனைத்து பஸ்களும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒன்-டூ-ஒன் என வள்ளியூர் ஊருக்குள் வராமல் புற வழிச்சாலை வழியாக செல்கின்றது.
மேற்குறிப்பிட்டுள்ள பஸ்கள் தடம் எண் எழுதப்படாத பஸ்களாகவும் செல்கின்றன. அரசு பஸ்கள் அனைத்து ஊர்களுக்கும் தடையின்றி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என விதிமுறையும் அரசின் ஒழுங்கும் இருக்கின்ற நிலையில் வள்ளியூரில் பஸ் நிறுத்தம் இருந்தும் நெல்லை -நாகர்கோவில் பஸ் நிலை யங்களில் காத்திருக்கும் வள்ளியூர் பயணிளை ஏற்றாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றது.
வள்ளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் வள்ளியூர் பஸ் நிலையத்தை நம்பிதான் வெளியூர்களுக்கு செல்கிறார்கள். மதுரை மண்டலத்தில் இருந்து வள்ளியூர் வழியாக 31 பஸ்களை இயக்கியும் மதுரை, திண்டுகல், குமுளி, பழனி, போடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்ற வள்ளியூர் பயணிகள் இந்த அரசு பஸ்களில் வள்ளி யூருக்கு வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு அரசு போக்கு வரத்து துறைக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி மதுரை மண்டலத்தில் இருந்து வள்ளியூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் வள்ளியூர் பஸ் நிலைத்திற்கு வந்து பயணி களை ஏற்றவும், இறக்கி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நெல்லை மண்டலத்தில் நாகர்கோவி லில் இருந்து டி.எல்.எக்ஸ். என்ற பெயரில் 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர வேளாங் கண்ணிக்கு செல்லும் பஸ், ஞாயிற்றுக்கிழமை தினங்களில் சென்னை செல்லும் சிறப்பு பஸ்கள், திருவண்ணாமலை செல்லும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் வள்ளியூர் பஸ் நிலையம் வருவதில்லை.
மேற்குறிப்பிட்ட பஸ்களும் தடம் எண் குறிப்பிடப்பாத பஸ்களாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் வருடத்தில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இடைநில்லா பஸ்களாக 3 பஸ்களை இயக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார்.
அதே நேரத்தில் 3 பஸ்கள் வள்ளியூர், பணகுடி, நாங்குநேரி ஊர்களில் நின்று செல்லவும் அனுமதி வழங்கினார்கள். ஆனால் தற்போது நாகர்கோவிலில் இருந்து 30 பஸ்கள் 5 முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் பயணிகள் இருந்தாலும் இல்லா விட்டாலும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை எதிர்கொள்ளும் வகையில் மதுரை மண்டலத்தில் இருந்து 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 60 பஸ்களும் வள்ளியூர் பஸ் நிலையம் வந்து செல்லாமல் புற வழிச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
மார்த்தாண்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாதாரண பஸ் நாகர்கோவில் வரையில் சாதாரண பஸ்சாகவும், நாகர்கோவிலில் இருந்து நெல்லை வரையில் இடை நில்லா பஸ்சாகவும் இயக்கப்பட்டு பின்னர் நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சாதாரண பஸ்சாகவும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் வள்ளியூர் பகுதி மக்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல முடியாமல் திணறுகின்றனர். எனவே தடம் எண் எழுதப் படாத அனைத்து டி.எல்.எக்ஸ். பஸ்களையும் வள்ளியூர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






