என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: நெல்லையில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை- திரளானோர் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
  • மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  நெல்லை:

  ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  20 இடங்களில் தொழுகை

  நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே பள்ளிவாசல்களில் திரளான இஸ்லாமியர்கள் திரண்டனர். பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது. நெல்லை மாநகரப் பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடைபெற்றது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

  தொடர்ந்து அவர் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹுதா பள்ளி வாசல் சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை மதீனா சி.பி.எஸ்.இ. பள்ளி திடலில் நடைபெற்றது.

  பள்ளி வாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரை ஆற்றினார்.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு, பசித்தோருக்கு உணவ ளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோ தரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாக பற்றி பிடித்திடுவோம்.

  புத்தாடை அணிந்து, அறுசுவை உணவுகளை உட்கொண்டு, உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்று தெரிவித்தார்.

  இந்த தொழுகையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி , ஜவஹர், தாவுத் ஹாஜியார்,முஸ்தபா, ஜெய்னுல் ஆபிதீன்,கட்சி நிர்வாகிகள் கனி, லெப்பை, கல்வத், சலீம் தீன், சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்நெல்லை மேலப்பாளையம் ஈத்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

  தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றம் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் பஜார் திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பத்தமடை உள்பட ஏராளமான இடங்களில் திறந்த வெளிகளிலும், பள்ளி வாசல்களிலும் காலையில் தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் ஒருவரை யொருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமா றிக்கொண்டனர். மேலும் அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது வாழ்த்து க்களை தெரிவித்துக் கொண்டனர்.

  Next Story
  ×