search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் நீர்மட்டம் 15.5 அடியாக குறைந்தது- நெல்லை மாவட்டத்தில் வறட்சியின் பிடியில் அணைகள்
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 15.5 அடியாக குறைந்து குட்டை போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    பாபநாசம் நீர்மட்டம் 15.5 அடியாக குறைந்தது- நெல்லை மாவட்டத்தில் வறட்சியின் பிடியில் அணைகள்

    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது.
    • தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகள் வறட்சியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

    வழக்கமாக மாவட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 814 மில்லிமீட்டர் ஆகும். இந்த மாதம் வரை 181 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் சுமார் 72 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 15.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதிலும் சுமார் 10 அடி வரையிலும் சகதி தான் இருக்கும் என்பதால் வறட்சியின் பிடியில் அணை சிக்கியுள்ளது. தற்போது அணையானது குட்டை போல் காட்சியளிக்கிறது.

    தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மணிமுத்தாறு அணை மட்டுமே உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 73.40 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் மொத்தம் 5,511 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும்.

    ஆனால் இன்று நிலவரப்படி அந்த அணையில் 1756 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மணிமுத்தாறு அணை நீரை நம்பிதான் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

    Next Story
    ×