என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
    X

    பாளை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த இரும்பு மின்கம்பத்தில் பமோதியது. விபத்தில் 2 பேரும் சாலையோர முட்புதருக்குள் தூக்கி வீசப்பட்டனர்.
    • உயிரிழந்த 2 பேரும் எங்கு சென்று வந்தார்கள்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் மீகா விசாரணை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    பாளை கோட்டூர்புரம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் சர்க்கார்(வயது 41). அதேபகுதியை சேர்ந்தவர் கணேசன்(35). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு பாளை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளனர்.

    பாளை பெரியபாளையம்-கோட்டூர் சாலையில் தனியார் ரைஸ்மில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த இரும்பு மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சாலையோர முட்புதருக்குள் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அவர்களை யாரும் பார்க்கவில்லை. சிறிது நேரத்திலேயே 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சாலையில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்து கிடப்பதையும், முட்புதருக்குள் 2 பேரும் இறந்து கிடப்பதையும் பார்த்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் மீகா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 2 பேரும் எங்கு சென்று வந்தார்கள்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் மீகா விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×