என் மலர்
திருநெல்வேலி
- கணேசமூர்த்தி நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
- இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது32). பெயிண்டர். இவர் கடந்த 8-ந்தேதி மாலை வேலைக்கு சென்று விட்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.
- கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
நெல்லை:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் தலைவருமான சீனிவாசன் கலந்து கொண்டு சமரச தீர்வு மைய விசாரணையை தொடங்கி வைத்தார்.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலா ளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் , குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசார ணை நடைபெற்றது. தொடர்ந்து தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.
இதனையடுத்து நீதிபதி சீனிவாசன் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் 10 இட ங்களில் 25 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 59 வழக்குகள், சிறு வழக்குகள் 1,413 என்பன உள்பட 1498 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 280 சமரச தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. எனவே பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா மற்றும் நீதிபதிகள் பன்னீர்செல்வம், திருமகள், குமரேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
- மேலப்பாளையம் தைக்கா தெரு பகுதிகளில் சிறப்பு தூய்மை பணி இன்று நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி துணை ஆணையர் தாணுமாலை மூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் ஆலோசனைபடி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம் தைக்கா தெரு பகுதிகளில் சிறப்பு தூய்மை பணி இன்று நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலைச்செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன், எல்.சி.எப். பணியாளர்கள் நவீன், இக்பால் மற்றும் மேற்பார்வையாளர் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நெல்லை சந்திப்பு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அருணாச்சலம் மது விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் கைலாச புரத்தை சேர்ந்த தொழிலாளி அருணாச்சலம் (வயது46) என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு வருகிற 25-ந்தேதி தொடங்க உள்ளது.
- பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு 300 மணி நேரங்களுக்கு நடைபெறும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு குழுமம் மற்றும் வங்கி தேர்வு குழுமம் இணைந்து நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு பாளையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வருகிற 25-ந்தேதி தொடங்க உள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு 300 மணி நேரங்களுக்கு நடைபெறும். போட்டி தேர்வு துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுனர்களை கொண்டு இவ்வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
பயிற்சிக்கான பாட நூல்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 120 பயிற்சி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் bit.iy/naanmudhalvanexams என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. மேற்படி குறிப்பிட்டுள்ள இணைய முகவரி NELLAI EMPLOYMENT OFFICE- என்ற TELEGRAM CHANEL-ல் பகிரப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.
இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் 17சி, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் சி காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0462-2532938 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பொதுமக்களிடம் இணையவழி மின்கட்டணம் செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கினார்.
- பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணியாளர்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
நெல்லை நகர்ப்புற கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிறப்பு ஆய்வு கூட்டம் கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
நெல்லை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி தலைமை தாங்கி பேசுகையில், வானிலை அறிக்கை சுட்டிக்காட்டியது போல் மோக்கா புயல் காரணமாக பெருமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கள் ஏற்பட்டால் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மேலும் தடையின்றி மின் வினியோகம் வழங்குவது குறித்தும், நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மின்வாரிய அலுவலர்களிடம், பொதுமக்களிடம் இணையவழி மின்கட்டணம் செலுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கினார்.
மின் நுகர்வோர்களிடம் மின்னகம் மின்னுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அந்தந்த பகுதி பிரிவு அலுவலக பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் பாதுகாப்பு வகுப்பு நடத்தி பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணியாளர்கள் பணிபுரிய உத்தரவிட்டார்
கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்ட் பொன்னுசாமி, சின்னசாமி, தங்கமுருகன், ராஜகோபல், சங்கர், முத்துகிருஷ்ணன் மற்றும் அனைத்து பிரிவு உதவி மின்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பழமையான கட்டிடங்களை இடித்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பாபநாசம் பகுதியிலும் மூலிகைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை:
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவம் மற்றும் ஹோமி யோபதி மருத்துவத்துறை இயக்குனர் கணேசன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு
முன்னதாக மருத்துவத்துறை இயக்குனர் கணேசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பழமையான கட்டிடங்களை இடித்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜி பிளஸ் 5 என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்களை கட்டுவது, பேராசிரியர்களுக்கான கட்டிடங்கள், உள்நோயாளிகள், வெளி நோயாளிக ளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் விதிகள்படி 5 ஏக்கர் தேவைப்படுகிறது.
புதிய கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையின் போது கூடுதலாக 60 இடங்களை கூட்டுவதற்கு கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. விரைவில் அது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும்.
மேலும் சித்த மருத்துவம் தொடர்பான புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.10 கோடியில் சென்னை அண்ணா மருத்துவமனையில் வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அதிநவீன சித்த மருத்து வத்தை நெல்லையில் உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள் ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புதிய மூலிகை பண்ணை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியிலும் மூலிகைப் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர் அவர் கூறினார்.
அப்போது சித்த மருத்துவ மனை டீன் சாந்த மரியாள் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
- வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
- ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே குமாரபுரம் பஞ்சாயத்து வாழை தோட்டம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை வழங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து திசையன்விளை பேரூராட்சி சண்முகபுரத்தில் உயர்கோபுர மின் விளக்னை இயக்கி வைத்தார். விழாவில் திசையன்விளை பேரூராட்சிகவுன்சிலர்கள் நடேஷ் அரவிந்த், கமலா, சுயம்புராஜன், பொன்மணி நடராஜன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனிஷா பயாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது.
- விழாவில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி 14-வது ஆண்டு விழா நடந்தது. திசையன்விளை லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் தலைமை தாங்கினார். கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் டிம்பர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்று பேசி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் இந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- போக்குவரத்து போலீஸ் நிலையத்தை வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
- தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்பெக்டர் சந்திரசேகர் மற்றும் வெள்ளத்துரை மரக்கன்றுகள் நட்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூரில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த போக்குவரத்து போலீஸ் நிலையம் டி.எஸ்.பி. அலுவலகம் அருகில் திறக்கப்பட்டது. அதனை வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
வள்ளியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலை முத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்பெக்டர் சந்திரசேகர் மற்றும் வெள்ளத்துரை மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- தி.மு.க. நிர்வாகி எதிர்புறம் பேசியவரிடம், மாதந்தோறும் 2-ந்தேதிக்குள் ரூ.50 ஆயிரம் கமிஷனாக தந்துவிட வேண்டும்.
- எதிர்புறம் பேசிய நபர், நான் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன் என்று கூறுகிறார்.
நெல்லை:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஒருவர் டாஸ்மாக் பார் உரிமையாளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மாமூல் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆடியோவில் தி.மு.க. நிர்வாகி எதிர்புறம் பேசியவரிடம், மாதந்தோறும் 2-ந்தேதிக்குள் ரூ.50 ஆயிரம் கமிஷனாக தந்துவிட வேண்டும். இல்லையெனில் பார் நடத்த முடியாது. நடத்த விடமாட்டேன். யாரிடம் போய் சொன்னாலும் எதுவும் நடக்காது என்று கூறுகிறார். இதற்கு எதிர்புறம் பேசிய நபர், நான் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன் என்று கூறுகிறார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பார் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும், மாமூல் கேட்டு நச்சரிப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது தி.மு.க. நிர்வாகி ஒருவர் பார் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் -2 திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
- இப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்தார். இந்த படத்தில் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு மலேசியாவில் நடந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதில் நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அப்போது தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகை காவ்யா தாப்பர் மலேசியாவில் நடந்த பிச்கைக்காரன் -2 படப்பிடிப்பில் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார். அப்போது நடந்த திகில் அனுபவத்தை அவர் உணர்ச்சிவசப்பட விவரித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-
நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் -2 படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் நடந்தது. அங்குள்ள லங்காவி கடற்கரையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நானும், விஜய் ஆண்டனியும் ஒரு படகில் கடலில் சென்று கொண்டிருந்தோம். அப்போது இன்னொரு படகு எங்கள் படகு மீது திடீரென மோதியது.இதில் படகில் இருந்த நானும், விஜய் ஆண்டனியும் கடலில் விழுந்தோம். நீரில் விழுந்ததும் எனக்கு எதுவும் தெரியவில்லை.

ஒரு நிமிடம் சுதாரித்த பின்னர் விஜய் ஆண்டனியை பார்த்தேன். அவர் நீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அவருக்கு நீச்சல் தெரியவில்லை. எனவே அவரை காப்பாற்ற அவர் அருகில் நீந்தி சென்றேன். அதற்குள் படக்குழுவினரும் அங்கு வந்து விட்டனர். அவர்கள் உதவியுடன் விஜய் ஆண்டனியை மீட்டு படகில் ஏற்றினோம்.
பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நீண்ட நேரத்திற்கு பிறகே கண்விழித்தார். அதன்பின்பே எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மூக்கில் எலும்பு முறிவும், நெற்றியில் காயமும் இருந்தது. இதற்காக எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடலில் விழுந்த போது நான் மரணத்தின் எல்லைக்கு சென்று வந்ததை உணர்ந்தேன். இப்போது அதை நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. மனசு படபடக்கிறது. இந்த விபத்தும், இதில் ஏற்பட்ட அனுபவமும் என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. எனது முகத்தில் விபத்தால் ஏற்பட்ட வடுக்கள் உள்ளன. அவை எனக்கு இந்த விபத்தின் நினைவை வாழ்நாள் முழுக்க நினைவுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.






