என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monthly special cleaning works"

    • நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • மேலப்பாளையம் தைக்கா தெரு பகுதிகளில் சிறப்பு தூய்மை பணி இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி துணை ஆணையர் தாணுமாலை மூர்த்தி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் ஆலோசனைபடி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம் தைக்கா தெரு பகுதிகளில் சிறப்பு தூய்மை பணி இன்று நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கலைச்செல்வி, மாயாண்டி, வேலு பிரபாகரன், எல்.சி.எப். பணியாளர்கள் நவீன், இக்பால் மற்றும் மேற்பார்வையாளர் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×