என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மாலை, இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும்.
    • மீண்டும் தள்ளுவண்டி கடைகள் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமானது தென்மாவட்டங்களில் அதிக பயணிகள் சேவையை கொண்ட ரெயில் நிலைய மாகும். இங்கு ரெயிலில் பயணிப்பதற்காக நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் தங்களது உறவினர்களுடன் வந்து இறங்குவார்கள்.

    போக்குவரத்து நெருக்கடி

    இதனால் சந்திப்பு பஸ் நிலைய சாலை, அங்கிருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்டவை எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டு வாகனங்கள் சீராக சென்று திரும்ப வழிவகை செய்வார்கள்.

    இட்லி கடைகள்

    கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இங்கு கடுமை யான போக்குவரத்து நெரு க்கடி இருந்ததால் பயணிகள் குறித்த நேரத்தில் ரெயிலை பிடிக்க முடியாத நிலை இருந்ததாக புகார்கள் எழுந்தது. இதற்கு காரணமாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், திடீரென முளைக்கும் இட்லி கடைகள் உள்ளி ட்டவை கூறப்பட்டன.

    இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சாலையை ஆக்கிரமித்து போடப் பட்டு இருந்த தள்ளு வண்டி கடைகள் முழுவது மாக அப்புறப்ப டுத்தப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் சீராக சென்று வந்தன. தற்போது மீண்டும் தள்ளு வண்டி கடைகள் போட முயற்சி நடைபெற்று வருகிறது.

    பயணிகள் புகார்

    மேலும் இரவு நேரங்களில் ரெயில்நிலைய சாலையின் 2 பகுதியிலும் இருக்கும் கடைகள் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் சிலர் சேர், அடுப்புகளை வைத்து இட்லி கடை போடுகின்றனர். இதனால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட தொடங்கி உள்ளதாகவும், இதனால் வாக னங்கள் செல்ல முடி யாமல் நெருக்கடி ஏற்பட்டு குறித்த நேரத்தில் ரெயி ல்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர்.

    எனவே மாநகர போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து தற்காலிக உணவ கங்களை அப்புறப்படுத்தி இரவு நேர போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு வீட்டின் மாடியில் ராமச்சந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ராமச்சந்திரனை,அசோக்குமார் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை அருகே கங்கைகொண்டானில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராமச்சந்திரன் (வயது 52) என்பவர் வசித்து வந்தார்.

    கொலை

    இவர் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இவருடைய குடும்பத்தினர் இலங்கையில் உள்ளனர். இந்த நிலையில் முகாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ராமச்சந்திரன் மர்மநபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ராமச்சந்திரனை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    முன்விரோதம்

    இந்நிலையில் முகாமில் உள்ளவர்கள் எண்ணிக்கையை சரிபார்த்தபோது, அங்கு வசித்து வந்த அசாக்குமார்(33), அவரது சகோதரர் கிருஷ்ண ராஜா ஆகியோர் அங்கிருந்து தலைமறை வாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், அதனை அசோக்குமார் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு அசாக்குமாரின் சகோதரர் கிருஷ்ணராஜாவுக்கும், ராமச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது அவரது கொலைக்கு பின்னர் 2 பேரும் முகாமில் இருந்து தலைமறைவாகி உள்ளனர் என்பதால் அவர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாமா? என்ற கோணத்தில் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கணேஷ் வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தாய் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்.
    • ரஸ்தா பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதியது.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள பட்டவர்த்தி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி ஆறுமுகம் (வயது45). இவர்களது மகன் கணேஷ் (23).

    பெண் பலி

    இந்நிலையில், கணேஷ் தங்களது வயலுக்கு செல்வதற்காக இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் தாய் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டு சென்றார்.அவர்கள் நெல்லை-சங்கரன்கோவில் சாலை மானூர் ரஸ்தா பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் கணேஷ் படுகாயமடைந்தார்.

    டிரைவரிடம் விசாரணை

    தகவலறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காரை ஓட்டி வந்த சந்திப்பு வீரராகவபுரத்தை சேர்ந்த கணேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனவா? ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி அவ்வப்போது போலீசாரால் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

    அங்கு இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் இருந்து வருகிறது. சமீபத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.

    • முப்புடாதி மற்றும் சிலர் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
    • 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முப்புடாதியை சரமாரி வெட்டிக்கொன்றது.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த பிரம்மதேசம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகநயினார். இவரது மகன் முப்புடாதி(வயது 32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.

    நேற்று இரவு அம்பையை அடுத்த வாகைகுளம் மூப்பனார் தெருவுக்கு சற்று தொலைவில் முப்புடாதி மற்றும் சிலர் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் அதே பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே முப்புடாதி நள்ளிரவு நேரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முப்புடாதியை சரமாரி வெட்டிக்கொன்றது. பின்னர் அவரது தலையை துண்டித்து அருகில் இருக்கும் வாறுகாலில் வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த முப்புடாதி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சமீபத்தில் முப்புடாதி மனைவியை அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் அவதூறாக பேசியதாகவும், அதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் முப்புடாதி ஒருவரை வெட்டியதாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதத்தில் அரிவாள் வெட்டுபட்டவர் இந்த கொலையை செய்திருக்கலாமா? அல்லது நேற்று நடைபெற்ற தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் சித்தார்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

    பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

    சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது என்றார்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • பாரதீய ஜனதா ஆட்சி, பணக்காரர்களுக்கான ஆட்சியாகவே இருக்கிறது என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ரூபி மனோகரன் தெரிவித்தார்.

    நெல்லை:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும் பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

    இதையொட்டி, தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில், சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் காங்கிரஸார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வெற்றியை கொண்டாடினார்கள்.

    பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இல்லை என்பதையே, கர்நாடக சட்டசபை தேர்தலில் எங்களது காங்கிரஸ் பேரியக்கம் பெற்றுள்ள அபார வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

    இந்த பாரதீய ஜனதா ஆட்சி, பணக்காரர்களுக்கான ஆட்சியாகவே இருக்கிறது. ஏழைகளும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    வேலை வாய்ப்பின்மை பெருகி விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    மக்களின் இந்த அதிருப்தி, கர்நாடக தேர்தலில் எதிரொலித்து இருக்கிறது. இனி, இது நாடு முழுவதும் தொடரும்.

    கர்நாடகாவில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தொடக்கம்தான். வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசார பணிகளில் நானும் 22 நாட்கள் ஈடுபட்டு இருக்கிறேன். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான மிகப்பெரிய எழுச்சியை கண்கூடாக காண முடிந்தது. அதன் வெளிப்பாடாகவே தேர்தல் முடிவும் அமைந்தது.

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொடரும். ராகுல்காந்தி, இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவது உறுதி.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • நாளை மறுநாள் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற வினியோக பிரிவு பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் தடை ஏற்படும் பகுதிகள்

    மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை 9 மணி முதல் 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

    மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம்,

    முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம் ஆஸ்பத்திரி ரோடு,குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு,மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேச புரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி,பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுபாசுக்கும் மீனவர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
    • திருப்பூர் மாவட்டத்தில் ராஜா தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே கூட்டப்பனை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமாடன். இவருடைய மகன் சுபாஷ் என்ற மணி (வயது 26). தொழிலாளி.

    கொலை

    இவர் உவரியை சேர்ந்த ரசிகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுபாசுக்கும் கூட்டப்பனையை சேர்ந்த மீனவர் ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் சுபாசை கொலை செய்ய ராஜா திட்டம் தீட்டியுள்ளார்.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சுபாசுடன் நட்பு பாராட்டி அவரை ராஜா வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபாசிற்கு மதுவிருந்து கொடுத்து அவர் மதுபோதையில் இருந்தபோது ராஜா, அவரது 2-வது மனைவி ஜோஸ்பின் சூசை வெஸ்பினா, ராஜாவின் சகோதரர்கள் தீபன் சிங், பிரவின் ஆகிய 4 பேரும் சேர்ந்து சுபாசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசிவிட்டு சென்று விட்டனர்.

    கைது

    இந்த சம்பவம் குறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜாவும், அவரது 2-வது மனைவியும் திருப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, ஏட்டுகள் ரத்தின வேல், ரெனால்டு ஆகியோர் மாறுவேடத்தில் சென்று துப்புதுலக்கி அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ராஜாவையும் அவரது 2-வது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீபன் சிங், பிரவின் ஆகியோர் ஏற்கனவே போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

    • ஏஜெண்டுகள் மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் கடந்த ஒரு வருடத்தில் ரூ.100 கோடி வருமானம் ஈட்டி உள்ளது

    நெல்லை:

    தென் மாவட்டங்களில் வருமானம் அதிகம் கொடுக்கும் ரெயில் நிலையமாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் இருந்து வருகிறது.

    தட்கல் டிக்கெட்

    இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு இடங்களுக்கு ரெயில் மூலம் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து செல்கின்றனர். அதில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.

    இந்த முறையில் டிக்கெட் எடுக்க அதிகாலையில் இருந்து பயணிகள் வரிசையில் நிற்பார்கள். ஆனால் இந்த முறையிலும் ஏஜெண்டுகள் மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

    பயணிகள் சங்கத்தினர் புகார்

    இதனால் சில போலியான நபர்கள் பெயர்களை முன்பதிவு செய்யும் சீட்டில் எழுதி வரிசையில் வைத்து சென்று விடுகின்றனர். பின்னர் டிக்கெட் கொடுப்பதற்கு சிறிது நேரம் முன் வந்து, கல் போட்டு பிடித்த இடத்தில் நின்று விடுவதாகவும், இதனால் நேரடியாக வந்து டிக்கெட் எடுக்க காத்திருக்கும் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றும் பலரும் புகார் கூறி வருகின்றனர். சந்திப்பு ரெயில் நிலையம் கடந்த ஒரு வருடத்தில் ரூ.100 கோடி வருமானம் ஈட்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தட்கல் டிக்கெட் எடுக்கும் நிலை இவ்வாறு இருப்பதாக ரெயில் பயணிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இங்கு தட்கல் டிக்கெட் எடுக்க நாள்தோறும் பலர் காத்திருந்து டிக்கெட் எடுத்துச் செல்லும் நிலையில் சில புரோக்கர்கள் போலியான முகவரியுடன் பெயர் மற்றும் விபரங்களை வெள்ளை தாளில் எழுதி அதன் மீது கல்லை வைத்து செல்கின்றனர். இதனால் உண்மையாக டிக்கெட் எடுக்க வரும் பலர் ஏமாந்து செல்கின்றனர்.

    தட்கல் முன்பதிவு திறக்கும் நேரத்தில் ரெயில் நிலையத்துக்கு வந்து காலை முதலே வரிசையில் நிற்பதாக கூறி உண்மையாக டிக்கெட் எடுக்க வருவோரிடம் தகறாறு செய்கின்றனர். இதனால் பலரும் மன உளைச்சலுடன் டிக்கெட் எடுக்க முடியாமல் செல்கின்றனர்.

    காவல்துறையினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் தட்கல் டிக்கெட் எடுக்க வரும் பொழுது சரியான நபரை அடையாளம் கண்டு வரிசையில் நிறுத்த வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

    • கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார்.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர்.

     நெல்லை:

    நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கு தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வு அதிகபடு த்துதல், கல்லூரிகளில் தொழில் முனைவு குறித்த உணர்வை உட்கொணர்தல், தொழில் காப்பகங்களுக்கு உதவி அளித்தல் ஒருங்கி ணைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுதல், அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் போ ன்ற செயல்பாடுகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு நடை பெற்றது.கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி, பாளை கிளை முதுநிலை மேலாளர், சரவணகாந்தி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளர் சுவைதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தர ங்கை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு பற்றியும், இன்றைய நவீன உலகில் நாளுக்குநாள் அழிவில்லாத சோதனை வளர்ச்சிய டைவதாகவும், அவசியப்படுவது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர். எந்திரவியல் துறை தலைவர் அக்பர் உசேன் வரவேற்று பேசினார். கல்லூரி எந்திரவியல் துறை பேராசிரியர் அலங்காரம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எந்திரவியல் துறை பேராசிரியர் சங்கர நாராயணன் மற்றும் துறை பேராசிரியர்கள், கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சபாநாயகர் அப்பாவு கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
    • கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் என்றார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமலைநம்பி கோவில் உள்ளது.

    அன்னதானம்

    இந்த கோவிலில் தமிழ் மாத முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் பக்தர்க ளுக்கு காலை, மதியம் வழங்கப்பட்டு வந்த அன்ன தானம் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்ததால் நிறுத்தப்பட்டது.

    இதனால் பாதிப்படைந்த பக்தர்கள் கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்துள்ள தடையை அகற்ற வேண்டும் என்று கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தனர்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று அன்னதானம் வழங்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் அன்னதானம் வழங்க வனத்துறையினர் விதித்த தடை அகற்றப்பட்டது. சித்திரை மாத கடைசி சனிக்கிழமையான நேற்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    கோவிலின் சிறப்பு

    முன்னதாக அவர் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். கோவிலின் சிறப்புகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக, தொன்று தொட்டு நடந்து வரும், எந்த மத வழிபாடாக இருந்தாலும், அதற்கு தடையோ, இடையூறோ ஏற்படுத்தக் கூடாது என்பதிலும், வழிபாட்டிற்கு பாதுகாப்பாக அரசும், அதிகாரிகளும் இருக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணமாகும்.

    12 மணி நேரம்

    கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கோவில் கொடை, திருவிழாக்களின் போது தான் மக்கள் மகிழ்ச்சியுடனும், உற்சா கத்துடனும் இருப்பார்கள். விழாக்களில் கிராமிய கலை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இவ்வாறு கோவில் விழாக்கள் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளாக மட்டுமின்றி கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடை விழாக்களுக்கு கோர்ட்டு வரை சென்று தான் அனுமதி பெற முடிந்தது. ஆனால் தி.மு.க. அரசு அமைந்ததும், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடை விழாக்களுக்கும், ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் கொடை விழா கலை நிகழ்ச்சிகளை 12 மணி நேரமும் நடத்தி கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருக்குறுங்குடி வன சரகர் யோகேஸ்வரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன், திருக்குறுங்குடி சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, நகர செயலாளர் கசமுத்து, ஸ்ரீதர், ராஜேந்திரன், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×