என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'வியூ பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது.
    • அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    நெல்லை:

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 106 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

    மேலும் 3 இடங்களில் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம்மைகள், இரும்பு, தாமிரத்தாலான பொருட்கள், நாணயங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் தமிழர்களின் தொடர்புகள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

    அருங்காட்சியகமாக மட்டுமல்லாமல் இதை சுற்றுலாத் தலமாக பயன்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. இது நெல்லையின் அடையாளமாக திகழும். தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இதன் அருகில் உயரமான பகுதியில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'வியூ பாயிண்ட்' அமைக்கப்பட உள்ளது.

    இங்குள்ள தொலைநோக்கி மூலம் நெல்லையின் அழகை பார்க்கும் வசதி கிடைக்கும். எனவே இது பொருட்களை மட்டும் வைக்கும் இடமாக இல்லாமல், அனைவரும் வந்து செல்லும் இடமாக அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு மூலிகை தோட்டங்கள், கைவினைப் பொருட்கள், கலை, கலாச்சார நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மையங்கள், திறந்தவெளி திரையரங்கு என்று பல்வேறு அம்சங்களுடன் அருங்காட்சியக வளாகம் அமைக்கப்பட உள்ளது.

    • வ.உ.சி. மைதானத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக பாளை வ.உ.சி. மைதானம் விளங்கி வருகிறது. இந்த மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழும் வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதில் மாலை நேரங்களில் பாளை பகுதியில் உள்ள முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து பொழுது போக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இங்குள்ள சறுக்குகள், ஊஞ்சல்கள் உள்ளிட்டவற்றில் அவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

    ரூ. 14 கோடியில்....

    இதுதவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடியில் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கும் ஏராளமானவர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் விளையாட்டு வீரர்களும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்லும் நிலையில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

    கழிப்பிட வசதி

    இவ்வாறு வருபவர்களின் அத்தியாவசிய தேவையான கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிக்காக மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குழாய்கள் உள்ளன. மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள கழிப்பறைகள் பெரும்பாலும் பூட்டிக் கிடப்பதாகவும், இதனால் மைதானத்திற்கு வரும் அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைவதாகவும் ஏராளமானோர் புகார் கூறி வருகின்றனர். இதேபோல் சிலநேரங்களில் அங்குள்ள குடிநீர் தொட்டியில் குழாயை திறந்தால் தண்ணீர் வருவதில்லை என்றும், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக வ. உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    • 32 இடங்களில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • கணக்கெடுப்பு குழுவினருக்கு நேற்று தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெ டுக்கு பணி நடந்தது.

    யானைகள் கணக்கெடுக்கும் பணி

    அதன்பின் யானைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) தொடங்கி, 19-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனசரகங்களில் 32 இடங்களில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் யானைகளை நேரில் காண்பது, அவைகள் எச்சங்களை சேகரித்தல், நீர்நிலைகளை சார்ந்து செல்லுதல் உள்ளிட்ட 3 முறைகளில் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு நேற்று தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து சூழலியலாளர் ஸ்ரீதரன் கணக்கெடுப்பு குழு வினருக்கு கணக்கெடுப்பது பற்றியும், சேகரிக்கப்படும் புள்ளி விபரங்களை செல்போனில் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளித்தார்.

    முகாமில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு முடிந்தவுடன் சேகரிக்கப்படும் புள்ளி விபரங்கள் சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அங்கு நடைபெறும் ஆய்வுக்கு பின் களக்காடு மலையில் வாழும் யானைகளின் எண்ணிக்கை தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார்.
    • வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வசந்த் (வயது 22). செண்டை மேள இசைக் கலைஞர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வசந்தை மீட்டு நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று வசந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த, கொள்கை பிடிப்புள்ள கட்சி தொண்டர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்.
    • நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை வடக்கு ஒன்றியம் அரியகுளம் ஊராட்சியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாளை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயண பெருமாள் கலந்து கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறும்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த, கொள்கை பிடிப்புள்ள கட்சி தொண்டர்களை, பூத் கமிட்டி நிர்வாகிகளாகவும், கிளை கமிட்டியில் நிர்வாகிகளாக நியமித்து, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலர ஒவ்வொரு தொண்டர்களும் முனைப்புடன் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

    கூட்டத்தில் ஊராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    இதில் ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • 18-ந் தேதி `எனது கலைப்பொருட்கள் சேகரிப்பு’ என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெறுகிறது.
    • 21-ந் தேதி பொது மக்களுக்கான திறந்த வெளிப்போட்டி நடைபெற உள்ளது.

    நெல்லை:

    சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை மறுநாள் (18-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது.

    18-ந் தேதி `எனது கலைப்பொருட்கள் சேகரிப்பு' என்ற தலைப்பில் கண்காட்சியும், 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு 6 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு `அருங்காட்சியக ஓவியத்தில் வர்ணம் தீட்டுதல்' போட்டியும் நடத்தப்படு கிறது.

    அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு `அருங்காட்சியங்களின் வரலாறு' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான பணிமனையும், 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு பொது மக்களுக்கான `அருங்காட்சி யங்களையும் அதன் இடங்களையும் சரியாகப் பொருத்துதல் ' என்ற திறந்த வெளிப்போட்டியும், மாலை 3.30 மணிக்கு நிறைவு விழாவும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். எனவே நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தகுதியுடையவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட அறிவியல் மையம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணையோ sciencecentrenellaiednprog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என அதிகாரி எஸ்.எம்.குமார் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் சந்திப்பில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள், திசையன்விளை நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • நள்ளிரவில் அவர்கள் அனைவரும் திரண்டு சென்று நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்கள் விரைந்து சென்று இரவு முழுவதும் போராடி மின்பழுதை சரிசெய்ய முயன்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தச்சநல்லூரை அடுத்த மேலக்கரையில் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக மேலக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பரமாரிப்பு காரணமாக அந்த பகுதியில் பகலில் மின்சாரம் இல்லை. மாலை 5 மணிக்கு மேல் மின்சாரம் வந்த நிலையில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். நள்ளிரவில் அவர்கள் அனைவரும் திரண்டு சென்று நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள், கனரக வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு உதவி பொறியாளர் சங்கரன் தலைமையிலான மின்வாரிய அதிகாரிகள், மாற்று வழியில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    இந்த போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மின்சாரம் தடைபட்டது. இந்நிலையில் இன்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டோம். குழந்தைகள், முதியவர்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உள்ளது. மின்துறை அதிகாரிகள் கொடுத்த உறுதியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டுள்ளோம். தொடர்ந்து இதுபோன்ற மின்வெட்டு இருந்தால் இதைவிட தீவிரமாக போராடுவோம் என்றனர்.

    இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், நேற்று தச்சநல்லூர் மேலக்கரை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நேற்று பகல் முழுவதும் மின்வினியோகம் இல்லை. தொடர்ந்து மாலை 5 மணி வரை மின் ஊழியர்கள் விரைவாக செயல்பட்டனர். அதன்பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் திடீரென டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டது. எனினும் உடனடியாக அங்கு ஊழியர்கள் விரைந்து சென்று இரவு முழுவதும் போராடி மின்பழுதை சரிசெய்ய முயன்றனர். ஆனால் அது முடியாத காரணத்தினால், மாற்றுப்பாதையில் மின்சாரம் வழங்கி உள்ளோம் என்றனர்.

    • கரும்புச்சாறு உள்ளிட்ட பானங்களில் கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்துவதாக புகார் வந்தது.
    • 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இளநீர், கரும்புச்சாறு, கூழ், ஜூஸ் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடைகளில் ஆய்வு

    இந்நிலையில் மாநகர பகுதியில் கோடைக்காலங்களில் விற்பனை செய்யப்படும் ஜுஸ், கரும்புச்சாறு, சர்பத் கடைகளில் தரமற்ற எலுமிச்சை பழங்கள், கெட்டுப்போன எலுமிச்சை பழங்களை பயன்படுத்து வதாகவும், அழுக்கடைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்து கின்றனர் எனவும் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம் புகார் கூறி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டுதலின்படி இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான குழுவினர் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    சுமார் 81 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 36 கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்ப டுத்தப்ப ட்டது கண்டு பிடிக்கப்பட்டு அதன் உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து அந்த கடைகளுக்கு ரூ.6,800 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளில் அரசு உத்தரவை மீறி பயன்ப டுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

    • விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் பாளை உழவர் சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
    • விக்னேசிடம் இருந்த ரூ. 1,000-ஐ சுந்தர் பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

    நெல்லை:

    பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாளை உழவர் சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த டவுனை சேர்ந்த சுந்தர் (26) என்பவர் அவரை வழிமறித்து பணம் கேட்டார். அவர் மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,000-ஐ பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.

    இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் ஐகிரவுண்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    • நாராயண பெருமாள் மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 2 நாட்களாக நாராயண பெருமாள் வீடு திறக்கப்படாமல் இருந்தது.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச் சந்தையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது25). எக்ட்ரீசியன். இவர் நெல்லை மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களாக இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் மேலப்பா ளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது நாராயண பெருமாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வையாபுரிநகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • குமார் உள்ளிட்டவர்களிடம் 31 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    தச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்னர். அப்போது வையாபுரிநகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் தாழையூத்தை சேர்ந்த குமார் (வயது46), பாளையை சேர்ந்த சஞ்சீவ் (23), பெருமாள் (35) மற்றும் விருதுநகரை சேர்ந்த ஜேசுராஜ் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 31 கிலோ வைத்திருந்ததும் தெரியவந்தது. அப்போது அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    ×