மேலப்பாளையத்தில் செண்டை மேள கலைஞர் தற்கொலை

இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலப்பாளையத்தில்  செண்டை மேள  கலைஞர் தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வசந்த் (வயது 22). செண்டை மேள இசைக் கலைஞர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வசந்தை மீட்டு நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று வசந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com