என் மலர்
உள்ளூர் செய்திகள்

தச்சநல்லூரில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற 4 பேர் கைது
- வையாபுரிநகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- குமார் உள்ளிட்டவர்களிடம் 31 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
தச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்னர். அப்போது வையாபுரிநகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் தாழையூத்தை சேர்ந்த குமார் (வயது46), பாளையை சேர்ந்த சஞ்சீவ் (23), பெருமாள் (35) மற்றும் விருதுநகரை சேர்ந்த ஜேசுராஜ் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 31 கிலோ வைத்திருந்ததும் தெரியவந்தது. அப்போது அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






