என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு நடந்தபோது எடுத்த படம்
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கு
- கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார்.
- இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்துறை சார்பில் மாணவர்களுக்கு தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வு அதிகபடு த்துதல், கல்லூரிகளில் தொழில் முனைவு குறித்த உணர்வை உட்கொணர்தல், தொழில் காப்பகங்களுக்கு உதவி அளித்தல் ஒருங்கி ணைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுதல், அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் போ ன்ற செயல்பாடுகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு நடை பெற்றது.கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி, பாளை கிளை முதுநிலை மேலாளர், சரவணகாந்தி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளர் சுவைதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தர ங்கை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு பற்றியும், இன்றைய நவீன உலகில் நாளுக்குநாள் அழிவில்லாத சோதனை வளர்ச்சிய டைவதாகவும், அவசியப்படுவது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர். எந்திரவியல் துறை தலைவர் அக்பர் உசேன் வரவேற்று பேசினார். கல்லூரி எந்திரவியல் துறை பேராசிரியர் அலங்காரம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எந்திரவியல் துறை பேராசிரியர் சங்கர நாராயணன் மற்றும் துறை பேராசிரியர்கள், கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.






