search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrayan"

    • மானாமதுரையில் பாபா மெட்ரிக் பள்ளியில் சந்திரயான் கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் நர்சரி ப்ரைமரி பள்ளியில் மாணவர்களுக்கு சந்திரயான் 3 பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவிற்கு நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் கபிலன் மற்றும் நிர்வாகி மீனாட்சி முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் சித்தார்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

    பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

    சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது என்றார்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
    • சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

    இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.

    நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது.

    இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

    அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

    இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.

    எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

    விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ×