search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Director Inspection"

    • நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பழமையான கட்டிடங்களை இடித்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • பாபநாசம் பகுதியிலும் மூலிகைப் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவம் மற்றும் ஹோமி யோபதி மருத்துவத்துறை இயக்குனர் கணேசன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

    ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு

    முன்னதாக மருத்துவத்துறை இயக்குனர் கணேசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி பழமையான கட்டிடங்களை இடித்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜி பிளஸ் 5 என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    புதிய கட்டடங்களை கட்டுவது, பேராசிரியர்களுக்கான கட்டிடங்கள், உள்நோயாளிகள், வெளி நோயாளிக ளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் விதிகள்படி 5 ஏக்கர் தேவைப்படுகிறது.

    புதிய கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையின் போது கூடுதலாக 60 இடங்களை கூட்டுவதற்கு கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. விரைவில் அது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும்.

    மேலும் சித்த மருத்துவம் தொடர்பான புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.10 கோடியில் சென்னை அண்ணா மருத்துவமனையில் வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    அதிநவீன சித்த மருத்து வத்தை நெல்லையில் உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள் ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புதிய மூலிகை பண்ணை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியிலும் மூலிகைப் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார்.

    அப்போது சித்த மருத்துவ மனை டீன் சாந்த மரியாள் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

    ×