search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலமாக 1,498 வழக்குகளுக்கு தீர்வு- மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தகவல்
    X

    மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன், மாணவர் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணையை வழங்கிய காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலமாக 1,498 வழக்குகளுக்கு தீர்வு- மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் தகவல்

    • தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.
    • கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் தலைவருமான சீனிவாசன் கலந்து கொண்டு சமரச தீர்வு மைய விசாரணையை தொடங்கி வைத்தார்.

    இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலா ளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் , குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசார ணை நடைபெற்றது. தொடர்ந்து தீர்வு காண ப்பட்ட வழக்கு களுக்கான சமரசத் தொகையையும் மாவட்ட நீதிபதி சீனிவாசன் உரியவரிடம் வழங்கினார்.

    இதனையடுத்து நீதிபதி சீனிவாசன் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் 10 இட ங்களில் 25 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. கடந்த 10 நாட்களாக மக்கள் நீதிமன்றம் மூலம் 4,028 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 59 வழக்குகள், சிறு வழக்குகள் 1,413 என்பன உள்பட 1498 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 280 சமரச தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. எனவே பொதுமக்கள் மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா மற்றும் நீதிபதிகள் பன்னீர்செல்வம், திருமகள், குமரேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×