search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்- நெல்லை கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் கார்த்திகேயன்

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்- நெல்லை கலெக்டர் தகவல்

    • ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு வருகிற 25-ந்தேதி தொடங்க உள்ளது.
    • பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு 300 மணி நேரங்களுக்கு நடைபெறும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு குழுமம் மற்றும் வங்கி தேர்வு குழுமம் இணைந்து நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு பாளையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வருகிற 25-ந்தேதி தொடங்க உள்ளது.

    இந்த பயிற்சி வகுப்புகள் 100 நாட்களுக்கு 300 மணி நேரங்களுக்கு நடைபெறும். போட்டி தேர்வு துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுனர்களை கொண்டு இவ்வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    பயிற்சிக்கான பாட நூல்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 120 பயிற்சி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் bit.iy/naanmudhalvanexams என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. மேற்படி குறிப்பிட்டுள்ள இணைய முகவரி NELLAI EMPLOYMENT OFFICE- என்ற TELEGRAM CHANEL-ல் பகிரப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.

    இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் 17சி, சிதம்பரம் நகர், பெருமாள்புரம் சி காலனியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0462-2532938 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×