search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conversation"

    • தி.மு.க. நிர்வாகி எதிர்புறம் பேசியவரிடம், மாதந்தோறும் 2-ந்தேதிக்குள் ரூ.50 ஆயிரம் கமிஷனாக தந்துவிட வேண்டும்.
    • எதிர்புறம் பேசிய நபர், நான் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன் என்று கூறுகிறார்.

    நெல்லை:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஒருவர் டாஸ்மாக் பார் உரிமையாளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மாமூல் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த ஆடியோவில் தி.மு.க. நிர்வாகி எதிர்புறம் பேசியவரிடம், மாதந்தோறும் 2-ந்தேதிக்குள் ரூ.50 ஆயிரம் கமிஷனாக தந்துவிட வேண்டும். இல்லையெனில் பார் நடத்த முடியாது. நடத்த விடமாட்டேன். யாரிடம் போய் சொன்னாலும் எதுவும் நடக்காது என்று கூறுகிறார். இதற்கு எதிர்புறம் பேசிய நபர், நான் பேசிவிட்டு முடிவை சொல்கிறேன் என்று கூறுகிறார். தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பார் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும், மாமூல் கேட்டு நச்சரிப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது தி.மு.க. நிர்வாகி ஒருவர் பார் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஓட்டுனர் உரிமத்துடனும் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #aadhaarcard #ravishankarprasad
    புதுடெல்லி:

    பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுள் ஒன்று ஆதார் அட்டை. தனி மனித அடையாளமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆதார் வங்கி கணக்கு முதல் அனைத்திலும் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இதன்மூலம் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளான நிலையில், ஆதார் எண்ணை கொண்டு ஊழல் செய்ய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், தனி மனித விவரங்களை அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அளித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

    மேலும், இந்த ஆதார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், வழக்குகளும் நிலுவையில் உள்ளன.



    இந்நிலையில், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் ஒரு ஆண்டாக இந்த பேச்சு வார்த்தை குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், இன்று, செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், சாலைகளில் மதுபோதையிலோ அல்லது வேறு காரணங்களினால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுனர்களை இதன் மூலம் எளிதில் பிடித்து விட முடியும் என்றும், மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்சென்றாலும் ஓட்டுனரை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், ஒருவர் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் கைரேகையினை மாற்ற முடியாது எனவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். #aadhaarcard #ravishankarprasad
    ×