என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330874
நீங்கள் தேடியது "Motorcycle Accident"
களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்தவர் வசந்த்ராஜா (வயது 23). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் சவளைக்காரன்குளம் செங்கல்சூளை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக தோப்பூரை சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் ஓட்டி வந்த சைக்கிளும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இந்த விபத்தில் வசந்த்ராஜா, முத்துக்குட்டி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்க த்தினர் அவர்களை மீட்டனர்.
பின்னர் வசந்த்ராஜாவை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
முத்துக்குட்டி நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X