திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்து நிலத்திற்கு சென்ற விவசாயி பலி

வெங்கடேசனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. ஏழுமலை மகன் வெங்கடேசன் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்து நிலத்திற்கு சென்ற விவசாயி பலி
Published on

விழுப்புரம்:  

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 46). விவசாயியான இவர் நேற்று மாலை தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பையூர் பாலத்தை தாண்டி மின்சார டிரான்ஸ்பர் அருகில் சென்ற போது அதே சாலையில் வெங்கடேசனுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. இதனை அதே ஊரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் ஓட்டி வந்தார்.

அப்போது முன்னாள் சென்ற ஏழுமலை மகன் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை முந்த பின்னால் சென்ற முத்துக்கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் முயன்றார். இதில் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் ஏழுமலை மகன் வெங்கடேசன் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் விவசாயப் பணி செய்து கொண்டிருந்தவர்கள் பலத்த காயமடைந்த வெங்கடேசனை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை மகன் வெங்கடேசன் உயிரிழந்தார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com