நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி படுகாயம்

சம்பவத்தன்று ஐகோர்ட்ராஜா தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி படுகாயம்
Published on

களக்காடு:

நாங்குநேரி ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கந்தையா மகன் ஐகோர்ட்ராஜா (வயது38). கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி-நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, எதிரே தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஐகோர்ட் ராஜாவும், அவரது மனைவி மஞ்சம்மா தேவியும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com