மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஜோசியக்காரர் பலி

சந்திரசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மீது மோதியது.இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஜோசியக்காரர் பலி
Published on

 கோபி:

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் குட்டம் பட்டியை சேர்ந்தவர் ஊர் ஊராக சென்று குறி ஜோசியம் பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பெருமாள் சிறுவலூர் கொளப்பலூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்

அப்போது கெட்டி சேவி யூரைச் சேர்ந்த சந்திரசேகரன் வயது 48 என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சந்திரசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெருமாள் மீது மோதியது.

இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன பெருமாளுக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com