என் மலர்
திருநெல்வேலி
- தமிழகம் முழுவதும் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைந்து போய்விட்டது.
- தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைந்து போய்விட்டது.
தக்காளி
குறிப்பாக தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை நெல்லையில் இதுவரை இல்லாத அளவில் ரூ.200 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று வட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சற்று அதிகமாக காணப்பட்டதால் விலை குறைந்தது. நேற்று ரூ.150-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
ரூ.140-க்கு..
இந்நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையானது.
பாளை மார்க்கெட்டில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியை வியாபாரிகள் வாங்கிச் சென்று தெருக்களில் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்தனர்.
அதே நேரத்தில் உழவர் சந்தைகளிலும் ரூ.138-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இஞ்சி விலை கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
ஒரு கிலோ இஞ்சி ரூ.280 முதல் ரூ.300 வரை இன்று விற்பனையாகிறது. மிளகாய் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 முதல் தரத்துக்கு ஏற்ப ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பீன்ஸ் விலை அதிகமாகவே உள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.130-க்கு இன்று விற்பனையானது. கேரட் மற்றும் அவரைக்காய் தலா ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- முக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
- 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
முக்கூடல்:
முக்கூடல் பேரூராட்சிக்கு ட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த மின்விளக்கு திறப்புவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அளித்தும் பதில் இல்லை. வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது.
இந்நிலையில் நேற்று உயர் மின்கோபுரத்திற்கு முன்பாக அரிக்கேன் விளக்கு மற்றும் ஒளி விளக்குகளை ஏற்றி வைத்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் முக்கூடல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் வேன் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் முத்துகிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- இந்த கோவிலின் அருகிலுள்ள சாமியார் பொத்தையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவல வழி பாடு நடைபெற்று வருகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில் வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமி கோவிலில் பவுர்ணமி கிரிவல வழிபாடு நடைபெற்றது.
வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் முத்துகிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகி லுள்ள சாமியார் பொத்தையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவல வழி பாடு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பவுர்ணமி கிரிவல வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக சாமியார் பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிரிவல வழிபாடு தொடங்கியது. பூஜித குரு மாதாஜிவித்தம்மா பூஜையை தொடங்கி வைத்தார்.
திரளான பக்தர்கள் சாமியார் பொத்தை யைச்சு ற்றி ஓம் நமோ பகவதே முத்துகிருஷ்ணாய என்ற மந்திரங்களை உச்சரித்து வலம் வந்தனர். பின்னர் மாலையில் முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ள மகாமேரு மண்ட பத்தில் திருவிளக்கு பூஜை நடை பெ ற்றது. இதில் திர ளான பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர்.
ஏற்பாடுகளை முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- மூலக்கரைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்கு மார் (வயது 60). இவர் மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க பேரூர் செயலாளராக இருந்து வந்தார்.
- இவர் கடந்த மாதம் 13-ந் தேதி அங்குள்ள அரசனார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் அசோக்கு மார் (வயது 60). இவர் மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க பேரூர் செயலாளராக இருந்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 13-ந் தேதி அங்குள்ள அரசனார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அசோக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6-ம் திருவிழாவான நேற்று காலையில் திரியாத்திரை திருப்பலி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
- பவனி மாதா காட்சி கொடுத்த மலையைச்சுற்றி வலம் வந்த பின்னர் மீண்டும் மாதா கோவிலை வந்தடைந்தனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் மாதா காட்சி கொடுத்த மலையை சுற்றிலும் மரிவல வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய 138-வது ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவிழா நாட்களில் தினமும் திரியாத்திரை திருப்பலி மற்றும் மாலை மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று வருகிறது.
மரிவல வழிபாடு
6-ம் திருவிழாவான நேற்று காலையில் திரியாத்திரை திருப்பலி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருவிழா நாளில் பவுர்ணமி தினமாக வந்ததை அடுத்து வழக்கமான பவுர்ணமி மரிவல வழிபாடு சிறப்பு பெற்றது. மாலையில் பக்தர்கள் அதிசய பனிமாதா சப்பரம் கோவில் முன்பிருந்து பவனியாக எடுத்து சென்றனர்.
இப்பவனி மாதா காட்சி கொடுத்த மலையைச்சுற்றி வலம் வந்த பின்னர் மீண்டும் மாதா கோவிலை வந்தடைந்தனர். மரிவல வழிபாட்டில் கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்கு தந்தை ஜாண்ரோஸ் மற்றும் திரளாக பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நற்கருணை மற்றும் ஆசீர் நடைபெற்றது.
- வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வளர்மதி (வயது23). நேற்று வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி அவரது தாயார் ஆவுடைதங்கம் (47) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான வளர்மதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் சுரேஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
- கடையில் இருந்த பால்துரை, பாலமுருகன் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே வன்னிகோனேந்தலில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் சூப்பர் வைசராக தேவர்குளத்தை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளார்.
நேற்று இரவு அவர் சீக்கிரமாகவே வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கடை ஊழியர்களான வடக்கு பனவடலி சத்திரத்தை சேர்ந்த பால்துரை (வயது 40), வன்னிகோனேந்தலை சேர்ந்த பாலமுருகன்(57) ஆகியோர் கடையில் விற்பனையை பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நி லையில் இரவு சுமார் 9.45 மணியளவில் கடைக்கு மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த பால்துரை, பாலமுருகன் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கடை ஊழியர்கள் 2 பேரையும் வெட்டியது. உடனே 2 பேரும் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிடவே, அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன், கையில் வெட்டுபட்ட பால்துரை ஆகியோரை போலீசார் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த கடை கழுகுமலை சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. அதில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து வெட்டியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கும்பல் டாஸ்மாக் கடையில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக கடை ஊழியர்களை கொலை செய்ய வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
- சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 52), விவசாயியான இவர் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பாலையா உறவினர்களான நம்பி(55), அவரது மகன் ரமேஷ் (24) ஆகியோர் பாலையாவை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் பாலையா ஆத்திரம் அடைந்து நம்பி, ரமேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக களக்காடு போலீசார் பாலையாவை கைது செய்தனர். இந்த வழக்கில் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், பாலையாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாலையா இன்று அதிகாலை திடீரென சிறை வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த சிறைக்காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலையாவின் உடலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
- சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நெல்லை:
கோவை மாவட்டம் ஓரைக்கல்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
தொழில் நிமித்தமாக இவர் நெல்லைக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளம் மாரியம்மன்கோ வில் தெருவை சேர்ந்த நம்பிராஜன்(31) என்பவர் அவருக்கு அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து 2 பேரும் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் சிவக்குமாருக்கு நெல்லையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலமாக கார் வாங்குவதற்கு நம்பிராஜன் ரூ.10 லட்சம் வாங்கி கொடுத்ததாகவும், அதற்கான தவணைத் தொகையை சிவக்குமார் திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன் நேற்று முன்தினம் தனது கூட்டாளிகளான திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்த தங்ககிருஷ்ணன் (28), அவரது சகோதரர் விக்ணேஷ்மாரி மற்றும் 17 வயது சிறுவனை அழைத்துக் கொண்டு கோவைக்கு காரில் புறப்பட்டுள்ளார்.
அங்கு வைத்து சிவக்குமாரை காரில் கடத்தி கொண்டு வந்த அந்த கும்பல் நெல்லை தச்சநல்லூரை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அவரை அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியது. இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த வர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தனர். ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் குடோனில் அடைத்து வைத்து தாக்கப்பட்டதில் காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன
- 250-மேற்பட்டோர் பங்கேற்றனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், எல்.எஸ்.மருத்துவமனை, திருப்பத்தூர் டெட்ராசிஸ் லைப் சயின்ஸ் மற்றும் எச்.பி.சி. பார்மா இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை கண்டறிதல் முகாம் ஆதியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடத்தியது.
ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கே.மணிவண்ணன் வரவேற்றார்.
முகாமை டாக்டர் லீலாசுப்ரமணியம் தொடங்கி வைத்து பேசினார். முகாமில் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர், மணிமேகலை ஆனந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குண சேகரன் ஆகியோர் பேசினர்.
இதில் 250 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்க ளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏலகிரி செல்வம், பி.கணேஷ்மல், வி.கே.ஆனந்த், டி.வெங்க டேசன், ஆர்.ஆர்.மனோகரன், ஆசிரியர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் என்.சங்கர் நன்றி கூறினார்.
- பாத்திரம் தலையில் வசமாக மாட்டிக்கொண்ட நிலையில் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியர் (வயது 4).
சிறுவன் வழக்கம்போல நேற்று இரவு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தபோது ஒரு எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டியுள்ளார்.
அந்த பாத்திரம் தலையில் வசமாக மாட்டிக்கொண்ட நிலையில் அதனை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் அலறல் சத்தம் போட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், பாத்திரத்தை எடுக்க கடுமையாக முயற்சித்துள்ளனர். பாத்திரத்தை எடுக்க பலரும் போராடிய நிலையிலும் அதனை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுவனை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்குள்ள மருத்துவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்ற பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள் அவர்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளை கொண்டு பாத்திரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவனின் தலையில் சிக்கிய பாத்திரத்தை பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அகற்றப்பட்ட சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
+2
- கடந்த வாரம் புறநகர் பகுதிகளில் வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
- 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர்.
நெல்லை:
தி.மு.க. சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர்க்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த மாதம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தமிழகம் முழுவதும் வீடு வீடாக மகளிர் உதவி தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. கடந்த வாரம் அனைத்து மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளில் சென்று வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் மாநகர பகுதிகளில் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் இதற்கென கூட்டுறவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வீடு, வீடாக...
குழுக்களாக பிரிந்து மாநகரப் பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர். இன்று வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சாலை தெரு, மீனாட்சிபுரம், சிந்து பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த டோக்கன்களில் எந்தெந்த தேதிகளில் யார்-யார் வர வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் எழுதப்பட்டி ருந்தது.
அதன்படி குறித்த நேரத்தில் பெண்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.






