search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் நெல்லையில் தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை
    X

    வட மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் நெல்லையில் தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை

    • தமிழகம் முழுவதும் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைந்து போய்விட்டது.
    • தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைந்து போய்விட்டது.

    தக்காளி

    குறிப்பாக தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை நெல்லையில் இதுவரை இல்லாத அளவில் ரூ.200 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில் நேற்று வட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சற்று அதிகமாக காணப்பட்டதால் விலை குறைந்தது. நேற்று ரூ.150-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    ரூ.140-க்கு..

    இந்நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையானது.

    பாளை மார்க்கெட்டில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியை வியாபாரிகள் வாங்கிச் சென்று தெருக்களில் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்தனர்.

    அதே நேரத்தில் உழவர் சந்தைகளிலும் ரூ.138-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இஞ்சி விலை கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    ஒரு கிலோ இஞ்சி ரூ.280 முதல் ரூ.300 வரை இன்று விற்பனையாகிறது. மிளகாய் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 முதல் தரத்துக்கு ஏற்ப ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் பீன்ஸ் விலை அதிகமாகவே உள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.130-க்கு இன்று விற்பனையானது. கேரட் மற்றும் அவரைக்காய் தலா ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×