என் மலர்
திருநெல்வேலி
- ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் தலைமையில் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் வன்கொடுமை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான சிவகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆணையத்தின் உறுப்பினர்கள் புனித பாண்டியன், குமாரவேல், லீலாவதி, இளஞ்செழியன், ரகுபதி, ரேகா பிரியதர்ஷினி மற்றும் ஆணைய உறுப்பினர் செயலாளர் கந்தசாமி, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விபரங்கள் தொடர்பாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, வன்கொடுமை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட வர்களுக்காக வழங்கப்படக்கூடிய நிவாரணத் தொகையை ஆணையத் தலைவர் சிவக்குமார் வழங்கினார்.
- இந்த ஆண்டின் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.
- தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி சந்திரா தொடங்கி வைக்கிறார்.
நெல்லை:
மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆலோசனை யின் படி இந்த ஆண்டின் 3-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவால் நெல்லை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 10 தாலுகாக்களில் நடைபெற உள்ளது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜீத வழக்குகள் காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நாளை காலை 9.45 மணிக்கு நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி யுமான சந்திரா தொடங்கி வைக்கிறார்.
எனவே இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சந்திரா தெரிவித்துள்ளார்.
- தச்சநல்லூர் மண்டலத்தில் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
- குடிநீர் கட்டண வரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் முகாமில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதி களில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
4 மண்டல உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நெல்லை மண்டலத்தில் வார்டு 15-ல் உள்ள டவுன் ராஜாஜிபுரம் (பாறையடி) மாநகராட்சி சமுதாய நலக்கூடத்திலும், பாளை யங்கோட்டை மண்டலத்தில் வார்டு 38-ல் உள்ள வி.எம்.சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 43-ல் உள்ள மத்திய சிறைச்சாலை எதிரில் காதுகேளாதோர் பள்ளி வளாகத்திலும்,
தச்சநல்லூர் மண்டலத்தில் வார்டு 12-ல் உள்ள செல்விநகர் அலகு எண்.1-ல் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிக வளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும்,
மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டண வரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பின்தங்கியுள்ள வரி வசூலை மேம்படுத்துவ தற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்தி ஒத்துழைப்பு நல்கிட மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
- புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணை யாளர் (பொறுப்பு) காளி முத்து அறிவுறுத்தலின்படி கொசு ஒழிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலாண்மை
நெல்லையில் பரவலாக சாரல்மழை பெய்து வருவதால் மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நட ராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்து சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொ ருட்களை அகற்ற வேண்டும் என வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி அதனை அகற்றினர்.
பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மேலப்பாளையம் பகுதியில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கப்பட்டது.
- கங்கைகொண்டான் சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
- மஞ்சீஸ்குமார் ஆலை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலை களில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதில் ஒரு தொழிற் சாலையில் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த பகவான் தாஸ் என்பவரது மகன் மஞ்சீஸ்குமார் (வயது 48) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4-ந் தேதி மஞ்சீஸ்குமார் ஆலை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி இரும்பு ஏணியில் விழுந்தார்.
இதில் மஞ்சீஸ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று நெல்லை வந்தார்.
- நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி. வேலுமணி இன்று நெல்லை வந்தார். சந்திப்பு பகுதியில் அவரை நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
அப்போது அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை அவருக்கு சால்வை அணிவித்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முககுமார், சிந்து முருகன், சின்னத்துரை, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.
- பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என ரூபி மனோகரன் கூறினார்.
களக்காடு:
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அதன் நினைவாக களக்காட்டில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் நடைபயணம் மேற்கொண்டார்.
களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வில் நடைபயணம் தொடங்கிய அவர் சுப்பிரமணியபுரம், ஊச்சிகுளம் விலக்கு, புதூர், பெல்ஜியம், களக்காடு பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக 12 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று களக்காடு காந்தி சிலை அருகே நடைபயணத்தை நிறைவு செய்தார்.
அதன் பின் பொதுக் கூட்டம் நடந்தது. முன்னதாக நடைபயணத்தின் போது ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,
'ராகுல் காந்தி மக்களை நேசிக்கும் தலைவர், அவருக்கு பதவி, புகழ் மீது ஆசை கிடையாது. அவரது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை உலகமே பாராட்டியது. நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. நாடு பின்னோக்கி செல்கிறது. ஏழைகள், இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர்.
பணக்காரர்கள், பணக்காரர்களாகவே உள்ளனர். விலைவாசி உயர்வை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பா.ஜ.க.வினர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்து வருகிறது. பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுகின்றனர்.
இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. இங்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார். இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் உள்பட ஆயிரக்க ணக்கானோர் சென்றனர். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று நாங்குநேரியில் இருந்து களக்காடு காந்தி சிலை வரை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
காங்கிரசார் நடைபயணம்
நாங்குநேரி கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பிருந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய நடைபயணத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் த.காமராஜ், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லப்பாண்டி, சந்திரசேகர், பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று நடைபயணம் சென்றனர்.
- காஞ்சனா முத்து சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார்.
- நரியூத்து விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த கார் காஞ்சனா முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடை வடக்கு தெருவை சேர்ந்தவர் அக்னி மாடன். இவரது மகன் காஞ்சனா முத்து (வயது 27). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி கடந்த ஆண்டு மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காஞ்சனா முத்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மானூரை அடுத்த நரியூத்து விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காஞ்சனாமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காஞ்சனாமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாராயணன் தனது உறவினர் சுடருடன் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார்.
- ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரெங்கராஜபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் நாராயணன் (வயது25). இவர் மும்பையில் உள்ள கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீரெங்கராஜ புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இதற்காக நாராயணன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று நாராயணன் தனது உறவினர் சுடருடன் கோவில் கொடை விழா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லெட்சுமணன் மகன்கள் ஸ்ரீராமன், ஹரிராம், ராமசுந்தரம் மகன் குமார் ஆகியோருக்கும், நாராயண னுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமன் உள்பட மூவரும் சேர்ந்து நாராயணனை கத்தியால் முதுகில் குத்தினர். இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஸ்ரீராமன் உள்பட 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நெல்லை:
தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் இன்று நெல்லை மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வரு கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் அங்கு வரவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த உறுதிமொழிக் குழுவினர், இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தின் போது, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அவ்வாறு விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு பரிந்துரைக்கப்படும் என சட்டமன்ற உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.
- தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
நெல்லை:
நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பாளை தாலுகா கமிட்டி மற்றும் பாளை கிளை சார்பில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித் தார். தொடர்ந்து கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பாளை பஸ் நிலையம் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாளை பஸ் நிலையம் சிக்னல் பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் சிறிது நேரம் மாற்று பாதையில் இயக்கப பட்டது.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர்.
போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் கோபாலன், மாவட்டத் தலைவர் மதுபால், இடை கமிட்டி செயலாளர்கள் நாராயணன், குழந்தைவேலு, கவுன்சிலர் முத்து சுப்பிர மணியன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அம்பை, வி.கே புரம், வள்ளியூர், களக்காடு, முக்கூடல், வீரவநல்லூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
- மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமாரிடம் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
- இதேபோல் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதாவிடம் மனு அளிக்கப்பட்டது.
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்த உத்தரபிரதேச சாமியாரை கைது செய்யக்கோரி நெல்லையில் தி.மு.க.வினர் புகார் அளித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமாரிடம் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடமும் மனு அளித்தனர்.
அப்போது வக்கீல் அணி தலைவர் சாமுவேல் பாஸ்கர், துணை அமைப்பாளர்கள் ஜோயல், தவசிராஜன் ஆகியோர் உடன்இருந்தனர். இதேபோல் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதாவிடம் மனு அளிக்கப்பட்டது.






