search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK complaint"

    • மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமாரிடம் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
    • இதேபோல் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்த உத்தரபிரதேச சாமியாரை கைது செய்யக்கோரி நெல்லையில் தி.மு.க.வினர் புகார் அளித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) பிரவேஷ்குமாரிடம் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடமும் மனு அளித்தனர்.

    அப்போது வக்கீல் அணி தலைவர் சாமுவேல் பாஸ்கர், துணை அமைப்பாளர்கள் ஜோயல், தவசிராஜன் ஆகியோர் உடன்இருந்தனர். இதேபோல் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதாவிடம் மனு அளிக்கப்பட்டது.

    தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக தேர்தல் கமிஷனில் திமுக புகார் அளித்துள்ளது. #DMK #LokSabhaElections2019 #TNElections2019

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து மனு கொடுத்தார்.

    பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சதி நடப்பதாக சந்தேகிக்கிறோம்.

    இதுகுறித்து நேற்று அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டனர். கலெக்டர் தந்த விளக்கம் தெளிவாக இல்லை. ஆகவே தி.மு.க. சார்பில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். அவர் விளக்கம் தருவதாக கூறி இருக்கிறார்.


    தமிழ்நாட்டில் எப்போதுமே அமைதியான முறையில் தேர்தல் நடக்கும். வட மாநிலங்களைப் போல் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் நடைபெறாது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் பல வினோதங்கள், பல வேடிக்கைகள் நடைபெறுகிறது.

    கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட் டிருந்த அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யவில்லை. 2 மணி நேரம் வித்தியாசம் காட்டுகிறது.

    மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருந்த கட்டிடத்திற்குள் பெண் தாசில்தார் சென்று வந்துள்ளார். இந்த வி‌ஷயம் கோர்ட்டு வரை சென்று அதன் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இப்போது தேனியிலும், ஈரோட்டிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஏதோ சதி செய்வதற்காக திட்டமிடுவதாகவே கருதுகிறோம். எந்த சதி திட்டமானாலும் அதை திமு.க. முறியடிக்கும்.

    தேனியில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவை யாரும் கேட்கவில்லை. தேர்தல் நடந்து முடிந்து 20 நாட்களுக்கு பிறகு இப்போது திடீர் என உபயோகப்படுத்தாத வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர்.


    தர்மபுரி-பூந்தமல்லி, கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கேட்டு இருந்தோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் கேட்காத இடத்துக்கு மறுவாக்குப்பதிவுக்காக அதிகாரிகள் தன்னிச்சையாக வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வருகிறார்கள்.

    இதில் மிகப்பெரிய மர்மம் உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.

    கடந்த வாரம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகனை வெற்றி பெற செய்ய வைக்க தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்த சூழ்நிலையில் இப்போது தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் புகார் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #LokSabhaElections2019 #TNElections2019

    ×