என் மலர்
திருநெல்வேலி
- இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
- ரசாயனங்கள் கலக்காத விநாயகர்சிலை களை பிரதிஷ்டை செய்து கரைக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மகாசபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதே போல் வீடுகளிலும் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடு வார்கள்.
சிலை தயாரிப்பு பணி
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி கடந்த மாதமே தொடங்கியது. மாநகர பகுதி களில் பாளை சமாதானபுரம், கிருபாநகர், மார்க்கெட் பகுதிகள், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சிலை தயாரிப்பு பணிகள் இரவு- பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அந்த வகையில் ஒரு அடி முதல் 12 அடி உயரம் வரை பல்வேறு வண்ணங்க ளில் வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
இந்த சிலைகள் ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த சிலைகளை பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் சிறிய அளவிலான சிலைகளை வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதே போல் கைகளில் எடுத்து செல்லும் வகையி லான சிறிய சிலைகளும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இது போல சிவன் பார்வதியுடன் கூடிய விநாயகர், லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர், கிருஷ்ணர் ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், சுயம்பு விநாயகர் என பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப் படுகிறது. இதே போல் அம்பை, வள்ளியூர் உள்பட மாவட்டம் முழு வதும் விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை, இலஞ்சி பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையா புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப் பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டு நீர் நிலை களில் கரைத்த இடங்களில் இந்த ஆண்டும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ரசாயனங்கள் கலக்காத விநாயகர் சிலை களை பிரதிஷ்டை செய்து கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.
- மாணவ-மாணவிகளின் கையெழுத்தில் ‘ஏ4’ அளவு தாளில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருத்தலும் அவசியம்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) உந்தும வளாகம் சார்பில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடக்கிறது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் எழுச்சி' என்ற தலைப்பிலும், 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'விண்வெளி தொழில் நுட்பத்தின் விளைவுகள், விண்வெளித்துறையின் கண்டுபிடிப் புகள் பூமியில் உள்ள வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கின்றன?' என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
25-ந்தேதி கடைசி நாள்
கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ-மாணவிகளின் கையெழுத்தில் 'ஏ4' அளவு தாளில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருத்தலும் அவசியம்.
போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும். இந்த கட்டுரை மாணவரால் தான் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
கட்டுரைகள் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ 'நிர்வாக அலுவலர், ஐ.பி.ஆர்.சி., மகேந்திரகிரி அஞ்சல், நெல்லை மாவட்டம்-627133' என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்புதல் வேண்டும். உறையின்மேல் 'கட்டுரை போட்டி' என்று குறிப்பிடப்பட வேண்டும்.
பரிசளிப்பு
தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதலாவது, 2-வது, 3-வது பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி மகேந்திரகிரியில் நடைபெறும் உலக விண்வெளி வார நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04637-281940, 281757, 9486041737, 9944604557 ஆகிய தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பணியாளர்களிக்கு குழந்தைகள் பங்கேற்க இயலாது.
இந்த தகவலை மகேந்திரகிரி இஸ்ரோ மைய குழு இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
- பேச்சுவார்த்தை திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் நடந்தது.
- வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை வரும் மழைகாலத்திற்குள் முடித்து தண்ணீர் கொண்டு செல்வதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
திசையன்விளை:
தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை அரசு போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி முதல் திசையன்விளையில் சுற்றுவட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக பேச்சு வார்த்தை திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் நடந்தது. இதில் நீர்வளத்துறை செயற்பொறி யாளர்கள் அண்ணாத்துரை, திருமலைக்குமார், பழனிவேல், உதவி செயற்பொறி யாளர் பேச்சிமுத்து ,திசையன்விளை வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜன், செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிந்திரன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், தி.மு.க. நகர செயலாளர் ஜான் கென்னடி மற்றும் விவசாயிகள் அரசு அதிகாரி கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு திட்ட வெள்ளநீர் கால்வாய் மற்றும் பல்வேறு நிலையில் உள்ள பணிகள் முன்னேற்றம் குறித்து விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை வரும் மழைகாலத்திற்குள் முடித்து தண்ணீர் கொண்டு செல்வதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுகொண்ட விவசாயிகள் 13-ந் ேததி நடத்த இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
- கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.
- காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி கலன் ஏற்றி வந்த மிதவைக் கப்பல் ஆனது கூடங்குளம் அணுமின் நிலைய துறைமுகப் பகுதிகளின் நுழைவு வாயில் பகுதியில் பாறையில் சிக்கியது.
இதனை மீட்கும் பணிகள் நேற்று நடைபெற்றது என்றாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் இதற்கான வல்லுனர் குழுவினர் கூடங்குளம் அணுமின் நிலையம் வந்து உள்ளனர். அவர்கள் இதனை மீட்கும் பணியை இன்று காலை முதலே தொடங்கி உள்ளனர். பாறையில் சிக்கி உள்ள மிதவைக் கப்பலை இழுப்பதற்கு வல்லுநர் குழுவினர் 3 பரிந்துரைகளை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வல்லுனர் குழுவினர் கடல் பகுதிகளில் இதுபோன்ற கப்பல்கள் சிக்கும் பொழுது அதனை மீட்கும் பணியில் அனுபவம் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உச்சிஷ்ட கணபதி 4 கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.
- திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரம் என்னும் பகுதியில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோவில் அமைந்துள்ளது.
ராஜ கோபுரத்துடன் 8 நிலை மண்டபங்கள், 3 பிரகாரங்கள், கொடி மரத்துடன், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் விநாயகருக்கான தனித் கோவில் இதுவாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி 4 கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் அம்பாளுடன் அருள் பாலிக்கிறார். இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவில் என்பதை பறைசாற்றுகிறது.
சித்திரை மாதத்தின் முதல் 3 நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது. சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் விநாயகா் சதுா்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், ரக்ஷா பந்தனம் போன்றவை கள் நடைபெற்றன.
திருவிழாவின் முதல்நாளான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை சாந்திகள் நடைபெற்று யாகசாலையில் கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது. தொடா்நது கொடிப்பட்டம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 8 மணிக்குள் கொடியேற்றம் நடை பெற்றது. பின்னா் கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
10 தினங்கள் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் காலையில் யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெறு கின்றது. மாலையில் விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா வரும் நிகழ்வு நடைபெறுகின்றது. வருகிற 16-ந்தேதி 8-ம் திருநாளில் மூலவருக்கு 1008 தேங்காய் அலங்காரமும், மாலையில் பச்சை சாத்தி திருவீதி உலாவும் நடைபெறும்.
வருகிற 18-ந் தேதி ஸ்ரீ விநாயகா் சதுா்த்தி விழாவும், தாமிரபரணி நதிக்கரையில் தீா்த்தவாாியுடன் திருவிழா நிறைவடைகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.
- நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி என்பவர்களை பற்றி மட்டுமே யோசிக்கிறது என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை:
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நடை பெற்று ஓராண்டு நிறை வானதையொட்டி நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதன்பின் களக்காடு காந்தி சிலை அருகே பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ராகுல் காந்தி ஒரு ராஜகுமாரன் அவருக்கு எந்த குறையுமே இல்லை. எல்லா வசதிகளும் உள்ளது. அப்படிப்பட்ட அவர் இந்திய மக்களுக்காக அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும், பாராளு மன்றத்தில் அதானிக்கும், மோடிக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டதற்காகவும் அவருடைய எம்.பி. பதவியை பறித்து வீட்டை காலி பண்ண சொன்னார்கள். அப்படி இருந்தும் அந்த சோதனைகள் எல்லாம் தாண்டி மீண்டும் ராகுல் காந்தி எம்.பி. ஆனார். அத்தகைய தலைவர் நமக்காக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். அதை நினைவு கூறும் வகையில் இன்று நாமும் நடந்தோம்.
மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி யோசிக்காமல் அம்பானி, அதானி என்பவர்களை பற்றி மட்டுமே யோசிக்கிறது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தான் இந்தியா பின்னோக்கி செல்கிறது. மக்கள் விலைவாசி உயர்வாலும், வேலை இல்லாமலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துதான் ராகுல் காந்தி மக்களின் நலனுக்காக ஒரு இந்திய ஒற்றுமை நடை பயணத்தை செய்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்திய கூட்டணியை அமைக்க காரணமானார். பரம்பரை பணக்காரரான ராகுல் காந்தி இந்திய மக்களின் நலனுக்காக கஷ்டப்படுகிறார். அவர் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட்டதில்லை.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய பதவி ஆகும் அதையே அவர் ராஜினாமா செய்தார். அதன் பிறகு கூட அவர் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
பணக்காரர் பணக்காரர் ஆகி கொண்டே செல்கிறார்கள். ஏழை எளிய மக்கள் இன்னும் ஏழ்மையிலே இருக்கிறார்கள். சாதியாலும், மதத்தாலும், மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். இதை யெல்லாம் மாற்ற நினைத்த ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் மூலம் அனைத்து மக்களையும், அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து காட்டினார். அவர் முயற்சியால் ஒன்றிணைந்த கூட்டணி கட்சி தான் இந்தியா.
இந்தியா கூட்டணி கட்சி பார்த்ததும் மோடிக்கு பயம் வந்துவிட்டது. எனவே தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மக்களை குழப்பம் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் என்ன முயற்சி செய்தாலும் ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி. நான் பல மாநிலங்களுக்கு பயணம் செய்து வருகிறேன். அங்கே எல்லாம் மக்களின் நிலைமை பின்னோக்கி செல்லுகிறது. தேர்தலில் மக்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்ப மாகிவிட்டது. தமிழகத்தில் ஒரு நல்ல முதல்-அமைச்சர் கிடைத்ததால் நம் மாநிலம் மட்டும் தப்பித்து விட்டது. பெருந்தலைவர் காமராஜர் என்ன திட்டங்களை மக்களின் நலனுக்காக கொண்டு வந்தாரோ அதை பின்பற்றியே பல திட்டங்களை நம்முடைய முதல்-அமைச்சர் மக்களின் நலனுக்காக கொண்டு வந்து கொண்டி ருக்கிறார். வரப்போகும் தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.க. அரசு பெரிய தோல்வியை சந்திக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும். கண்டிப்பாக ராகுல் காந்தி பிரதமராக வருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வட்டார, நகரங்களில் உள்ள சுமார் 1500 - க்கும் மேற்பட்ட காங்கிரசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ், மாநில விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத், மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், செல்லப்பாண்டி, ராஜகோபால் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் நம்பிதுரை, காமராஜ், மலையடிப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், களக்காடு நகரத் தலைவர் ஜார்ஜ் வில்சன், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
- மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் இளநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய பாடங்களும், தமிழ், ஆங்கிலம், வரலாறு பொருளாதாரம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், வணிகவியல், கணிதம், இயற்பியல் வேதியியல் மற்றும் முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய முதுநிலை பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்த பாடங்களில் சேர்வதற்கான தேதி வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம், (www.msuniv.ac.in/Distance-Education) விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை பதிவாளர் சாக்ரட்டீஸ் தெரிவித்துள்ளார்.
- பால்துரை வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
- மணிகண்டன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது சி.சி.டி.வி காமிரா காட்சி மூலம் தெரியவந்தது.
வள்ளியூர்:
நாங்குநேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்துரை (வயது 33). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பால்துரை பணிபுரியும் நிறுவனத்தின் வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து பால்துரை வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நம்பிதலைவன் பட்டயம், மேலத் தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) மோட்டார் சைக்கிளை திருடி சென்றது அங்கு பொருத்தியுள்ள சி.சி.டி.வி காமிரா காட்சி மூலம் தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை வள்ளியூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் கார்த்திக்குக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
- இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவருக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கார்த்திக்கை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள் மோதிக்கொள்வதை பார்த்தவர்கள் அருகில் உள்ள டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- அதை தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை சமரசம் செய்த போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மாலை அங்கு படித்து வரும் 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி முடிந்து ஊருக்கு செல்வதற்காக டவுன் மேல ரத வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளனர்.
பின்னர் அவர்களில் 10 பேர் திடீரென மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனிடையே மாணவர்கள் மோதிக்கொள்வதை பார்த்தவர்கள் அருகில் உள்ள டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை சமரசம் செய்த போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் டவுனில் பரபரப்பு ஏற்பட்டது.
- மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
- தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ. 41 லட்சம் சமரசத் தொகை வழங்கப்பட்டது.
நெல்லை:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
4,973 வழக்குகள்
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குள், குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் என 4,973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ. 41 லட்சம் சமரசத் தொகை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-
10 தாலுகா
நெல்லை மாவட்டத்தில் 10 தாலுகாவில் 27 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் இன்று நடந்து வருகிறது. இன்று 4,973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரை நிலுவையில் உள்ள 5,771 வழக்குகளில் 3,595 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 6 கோடியேரூ. 54 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இது போன்று நிலுவையில் இல்லாமல் நேரடியாக வந்த 251 வழக்குகளில் 144 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 54 லட்சத்து 52 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது.
- மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி உற்பத்தி செய்யும் எந்திரம் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.
சுமார் 300 டன் எடை கொண்ட இந்த எந்திரம் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தது. நேற்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவை கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது இழுவை கப்பலுக்கும், மிதவைக்கும் இடையிலான கயிறு அறுந்து விட்டதினால் நீராவி உற்பத்தி எந்திரத்தின் மிதவை அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கி உள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
இதனால் மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் இருப்பதினால் அதனை சரி செய்யும் பணிகளில் இதனை ஏற்றி வந்த ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள அந்த மிதவையானது கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மீண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அந்த சிறிய துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






