என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- பால்துரை வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
- மணிகண்டன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது சி.சி.டி.வி காமிரா காட்சி மூலம் தெரியவந்தது.
வள்ளியூர்:
நாங்குநேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்துரை (வயது 33). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பால்துரை பணிபுரியும் நிறுவனத்தின் வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து பால்துரை வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நம்பிதலைவன் பட்டயம், மேலத் தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) மோட்டார் சைக்கிளை திருடி சென்றது அங்கு பொருத்தியுள்ள சி.சி.டி.வி காமிரா காட்சி மூலம் தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை வள்ளியூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






