search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO Center"

    • போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.
    • மாணவ-மாணவிகளின் கையெழுத்தில் ‘ஏ4’ அளவு தாளில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருத்தலும் அவசியம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) உந்தும வளாகம் சார்பில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடக்கிறது.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் எழுச்சி' என்ற தலைப்பிலும், 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'விண்வெளி தொழில் நுட்பத்தின் விளைவுகள், விண்வெளித்துறையின் கண்டுபிடிப் புகள் பூமியில் உள்ள வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கின்றன?' என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.

    25-ந்தேதி கடைசி நாள்

    கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ-மாணவிகளின் கையெழுத்தில் 'ஏ4' அளவு தாளில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருத்தலும் அவசியம்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும். இந்த கட்டுரை மாணவரால் தான் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    கட்டுரைகள் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ 'நிர்வாக அலுவலர், ஐ.பி.ஆர்.சி., மகேந்திரகிரி அஞ்சல், நெல்லை மாவட்டம்-627133' என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்புதல் வேண்டும். உறையின்மேல் 'கட்டுரை போட்டி' என்று குறிப்பிடப்பட வேண்டும்.

    பரிசளிப்பு

    தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதலாவது, 2-வது, 3-வது பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி மகேந்திரகிரியில் நடைபெறும் உலக விண்வெளி வார நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு 04637-281940, 281757, 9486041737, 9944604557 ஆகிய தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பணியாளர்களிக்கு குழந்தைகள் பங்கேற்க இயலாது.

    இந்த தகவலை மகேந்திரகிரி இஸ்ரோ மைய குழு இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    • உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    நெல்லை:

    உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளி குப்பைகள் தணிக்கும் முறைகள் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    இதில் பாளை பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி மாணவி மரிய புஷ்பம் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு கேரள முதல்-அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குனருமான சந்திர தத்தன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    வெற்றி பெற்ற மாணவி மரிய புஷ்பத்தை பள்ளி தாளாளர் சாமுவேல பாஸ்கர் ராஜ், முதல்வர் கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    ×