நெல்லை பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு
Published on

நெல்லை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் இளநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய பாடங்களும், தமிழ், ஆங்கிலம், வரலாறு பொருளாதாரம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், வணிகவியல், கணிதம், இயற்பியல் வேதியியல் மற்றும் முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய முதுநிலை பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

இந்த பாடங்களில் சேர்வதற்கான தேதி வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம், (www.msuniv.ac.in/Distance-Education) விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை பதிவாளர் சாக்ரட்டீஸ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com