search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற  தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,973 வழக்குகள் விசாரணை
    X

    நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா ஒருவருக்கு காசோலை வழங்கிய காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,973 வழக்குகள் விசாரணை

    • மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
    • தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ. 41 லட்சம் சமரசத் தொகை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

    4,973 வழக்குகள்

    இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர்கள் வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குள், குடும்ப வழக்குகள், காசோலை வழக்குகள் என 4,973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    தொடர்ந்து விபத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ. 41 லட்சம் சமரசத் தொகை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    10 தாலுகா

    நெல்லை மாவட்டத்தில் 10 தாலுகாவில் 27 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் இன்று நடந்து வருகிறது. இன்று 4,973 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரை நிலுவையில் உள்ள 5,771 வழக்குகளில் 3,595 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 6 கோடியேரூ. 54 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    இது போன்று நிலுவையில் இல்லாமல் நேரடியாக வந்த 251 வழக்குகளில் 144 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 54 லட்சத்து 52 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×