என் மலர்
நீங்கள் தேடியது "tax collection camp"
- வழக்கம்போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.
- சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்.
கோவை,
கோவையில் மாநகராட்சி சாா்பில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் இன்று மற்றும் நாளை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரியினங்களை பிப்ரவரி 20 -ந் தேதிக்குள் அனைவரும் செலுத்த வேண்டும். மாாா்ச் 31-ந் தேதி வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மாநகரில் இன்று மற்றும் நாளை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
கிழக்கு மண்டலத்தில் 5-வது வாா்டு விசுவாசபுரம் பகுதி, 55-வது வாா்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சிப் பள்ளி, 56-வது வாா்டு சுங்கம் மைதானம், ஒண்டிப்புதூரில் 57,58-வது வாா்டு நெசவாளா் காலனி, மேற்கு மண்டலத்தில் 34-வது வாா்டு, மஞ்சீஸ்வரி காலனி, கவுண்டம்பாளையம்.
விநாயகா் கோவில் வளாகம், 35-வது வாா்டு, இடையா்பாளையம் அண்ணா நகா் ஹவுஸிங் யூனிட், 39-வது வாா்டு, சீனிவாசப் பெருமாள் கோவில் வளாகம், கவுண்டம்பாளையம். 40-வது வாா்டு, வீரகேரளம் சித்தி விநாயகா் காலனி, விநாயகா் கோவில், தின்மையா நகா். தெற்கு மண்டலத்தில், 88-வது வாா்டு, குனியமுத்தூா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளி, 94-வது வாா்டு, மாச்சம்பாளையம் விநாயகா் கோவில் திடல் பகுதி.
வடக்கு மண்டலம் 11-வது வாா்டு ஜனதா நகா் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 15-வது வாா்டு சுப்பிரமணியம்பாளையம் வாா்டு அலுவலகம், 19-வது வாா்டு மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், 25-வது வாா்டு காந்திநகா் அரசு மேல்நிலைப்பள்ளி, 28-வது வாா்டு, ஷோபா நகா் வாா்டு அலுவலகம், 29-வது வாா்டு அரிமா சங்கம்.
மத்திய மண்டலத்தில் 32-வது வாா்டு சிறுவா் பூங்கா, சங்கனூா் நாராயணசாமி வீதி, 62-வது வாா்டு, சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 63-வது வாா்டு, பெருமாள் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகம், 80-வது வாா்டு, கெம்பட்டி காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 84-வது வாா்டு, ஜி.எம்.நகரில் உள்ளதா்ஹத் இஸ்லாம் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரிவசூல் மையம் வழக்கம்போல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
- இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் வார்டுகளில் பின்தங்கி உள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காகவும், வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினை அன்றைய தினம் நிலுவையின்றி செலுத்திடவும் வாய்ப்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்
அதன்படி மேலப்பாளையம் மண்டலம் வார்டு 47 மற்றும் 49 ஆகிய பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக நேரூஜி வீதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று சிறப்பு வரிவசூல் முகாம் நடந்தது.
இம்முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டண வரிவிதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கினர்.
இதேபோல் நெல்லை மண்டலம் வார்டு 22-ல் பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டு வரியை நிலுவையின்றி செலுத்தினர். இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மண்டல சேர்மன் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 11 பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம் வார்டு எண் 32 பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது.
- தச்சநல்லூர் மண்டலத்தில் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
- குடிநீர் கட்டண வரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் முகாமில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதி களில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
4 மண்டல உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நெல்லை மண்டலத்தில் வார்டு 15-ல் உள்ள டவுன் ராஜாஜிபுரம் (பாறையடி) மாநகராட்சி சமுதாய நலக்கூடத்திலும், பாளை யங்கோட்டை மண்டலத்தில் வார்டு 38-ல் உள்ள வி.எம்.சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 43-ல் உள்ள மத்திய சிறைச்சாலை எதிரில் காதுகேளாதோர் பள்ளி வளாகத்திலும்,
தச்சநல்லூர் மண்டலத்தில் வார்டு 12-ல் உள்ள செல்விநகர் அலகு எண்.1-ல் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிக வளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும்,
மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டண வரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பின்தங்கியுள்ள வரி வசூலை மேம்படுத்துவ தற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்தி ஒத்துழைப்பு நல்கிட மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






