கங்கைகொண்டான் சிப்காட்டில் தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து வட மாநில தொழிலாளி சாவு

கங்கைகொண்டான் சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.மஞ்சீஸ்குமார் ஆலை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார்.
கங்கைகொண்டான் சிப்காட்டில் தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து வட மாநில தொழிலாளி சாவு
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலை களில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதில் ஒரு தொழிற் சாலையில் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த பகவான் தாஸ் என்பவரது மகன் மஞ்சீஸ்குமார் (வயது 48) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4-ந் தேதி மஞ்சீஸ்குமார் ஆலை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி இரும்பு ஏணியில் விழுந்தார்.

இதில் மஞ்சீஸ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com