என் மலர்
தஞ்சாவூர்
- தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
- கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தல்.
தஞ்சாவூர்:
தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தஞ்சாவூர் அரசு போக்குவரத்து நகர்1 கிளை மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கும்பகோணம் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பணிமனை முன்பு இன்று காலை பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ மத்திய சங்கப் பொருளாளர் ராமசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஐ.என்டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் தாமரைச் செல்வன் நன்றி கூறினார்.
- நெற்பயிர்களுக்கு தேங்காய், காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றால் படையலிட்டு திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவிடம் இருந்து உரிய காவிரி நீர் பெற்றுதரக்கோரி விவசாய சங்க நிர்வாகி கக்கரை சுகுமாறன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அங்கு நெற்பயிர்களுக்கு தேங்காய், காய்கறிகள், பழம் உள்ளிட்டவற்றால் படையலிட்டு திதி கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக விவசாயி ஒருவர் மந்திரங்கள் ஓதி திதி கொடுத்தார்.
அப்போது காவிரி நீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
- சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
பாபநாசம்:
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சி யரிடம், திருநங்கை சுபஸ்ரீ தலைமையில் மனு அளிக்க ப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கருப்பூர் , மணலூர் பகுதிகளில் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். திடீரென எங்களை வீட்டை விட்டு காலி செய்யமாறு வீட்டின் உரிமையாளர் கூறி வருகிறார். எங்களுக்கு எங்கு போவது என்று தெரி யவில்லை.
எங்கள் குடும்பத்தினரும் எங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. எனவே சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நிரந்தர முகவரியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாய் பேசாத குழந்தைகளிடம் கருத்துரை வழங்கினார்.
- பேரணியில் தொழிலதிபர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவோணம்:
ஒரத்தநாட்டில் சர்வதேச காது கேளாதோர் தின சைகை மொழிக்கான சர்வதேச நாள் பேரணி நடைபெற்றது.
அண்ணா சிலையில் இருந்து தொட ங்கிய பேரணியை ஒரத்தநாடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.
சர்வதேச காது கேளாதோர் உரிமைகள் பிரகடனம் குறித்து ஒரத்தநாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சாரதா, வாய் பேசாத குழந்தைகளிடம் கருத்துரை வழங்கினார்.
இந்தப் பேரணியில் காது கேளாத குழந்தைகளின் சைகை மொழி வழிநடத்தலை ராகவி, வழங்கினார்.
பேரணியை காது கேளாதோர் அமைப்பின் தலைவர் விவேக், செயலாளர் சிவாஜி உள்ளிட்ட பலர் முன்னின்று நடத்தினர்.
இந்த பேரணியில் தொழிலதிபர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காவிரி நீர் வழங்காத கர்நாடகா, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
- திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரெயிலை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர்:
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்க மறுத்ததால் இந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெருமளவில் குறுவை பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசு மற்றும் நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், தண்ணீரின்றி வாடி சேதமான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் பொருளாளர் மணிமொழியன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன் உள்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.
பின்னர் காவிரி நீர் வழங்காத கர்நாடகா, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் திரண்டு ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். தண்டவாளத்தில் கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரெயிலை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் ரெயில் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் படுத்து கிடந்தும் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதனால் ரெயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதனை தொடர்ந்து 30 நிமிடம் தாமதமாக சோழன் விரைவு ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் பூதலூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- ராம்குமார் நேற்றிரவு பஸ் மூலம் கும்பகோணம் பஸ்நிலையத்திற்கு சென்றார்.
- மொத்தம் 8 சந்தன கட்டைகள் 31 கிலோவில் இருந்தது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் நாஞ்சி கோட்டை பகுதியை சேர்ந்த வர் ராம்குமார் (வயது 65).
இவர் நேற்றிரவு பஸ் மூலம் கும்பகோணம் பஸ்நிலையத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து சென்னை செல்வதற்காக காத்திருந்தார். அவர் கையில் ஒரு சூட்கேஷ் வைத்திருந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் வந்த கும்பகோணம் போலீசார் ராம்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் கையில் வைத்திருந்த சூட்கேஷ் திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் சந்தனகட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் கும்பகோணம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அதில் மொத்தம் 8 சந்தன கட்டைகள் 31 கிலோவில் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 1.50 லட்சமாகும்.
இது குறித்து கும்பகோணம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்ச ம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.
- மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
- நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.
தஞ்சாவூர்,
தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணி வண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளி அக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிபட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகம், மாதாகோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்னாத்துக்க ன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
- அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் விமானப்ப டைத்தளம் அமைந்துள்ளது.
இந்த விமானப்படை தளத்திற்கு கூடுதலாக சுற்றுச்சுவர் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்னாத்துக்கன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீதமுள்ள சாலையும் கையகப்ப டுத்தப்பட்டு சுற்றுச் சுவர் கட்டும் பணி தொடங்கியது.
இன்று காலை இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இனாத்துக்கான்பட்டி பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர் .
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், சாலையை கையகப்படுத்தி சுற்று சுவர் கட்டுவதால் நாங்கள் நகருக்குள் செல்ல வேண்டு மென்றால் வேறு வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது .
இதனால் கால விரயம் ஏற்படுகிறது.
1எனவே எங்களுக்கு வேறு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.
அதற்கு அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இதனை ஏற்று க்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவ த்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
- மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மானோஜிபட்டி மங்களம் நகரை சேர்ந்தவர் பெலிப்ஸ் பெர்னாண்டஸ் (வயது 28).
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார்.
மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த பெலிப்ஸ் பெர்னாண்டஸ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள், உண்டியல் பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
மொத்தம் திருடு போன பணம், பொருட்களின் மதிப்பு ரூ.24 ஆயிரத்து 500 என கூறப்படுகிறது.
இது குறித்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.
- பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
மெலட்டூர்:
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தஞ்சை அவர் லேடி ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் ராராமுத்திரகோட்டை கிராமத்தில் நடைபெற்றது.
முகாமில் புனித சந்தன மாதா ஆலய பங்குதந்தை விக்டர்தாஸ் முன்னிலை வகித்தார்.
இதில் ராராமுத்திர கோட்டை ஊராட்சி தலைவர் சோழன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் பொது மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.இதில் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய மாதா ஆஸ்பத்திரி ஷோபா, வின்மலர் மற்றும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
- ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாஜலபதி சாமி கோவிலில் புரட்டாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- 9-ம் நாள் உற்சவமான இன்று காலை ரதா ரோஹனம் கோரதம் புறப்பாடு நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாஜலபதி சாமி கோவிலில் புரட்டாசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியான நேற்று காலை வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது.
இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பெருமாள்- தாயார் தோழிக்கினியான் அலங்காரத்தில் எழுந்தருளினர்.
அதனைத் தொடர்ந்து, 9-ம் நாள் உற்சவமான இன்று காலை ரதா ரோஹனம் கோரதம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர், அகோராத்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, மாலை உற்சவர் திருவடி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், நாளை காலை மூலவர் திருமஞ்சனம், மதியம் அன்னபாவாடை உற்சவம், மாலை புஷ்ப யாகம் சாற்று முறை, இரவு சப்தாவரணம் புறப்பாடு நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சாந்தா, அறங்காவலர் குழு தலைவர் மோகன், அறங்கா வலர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன், இளங்கோவன், மகேஸ்வரி மற்றும் பொறுப்பாளர்கள் செய்துள்ளனர்.
- வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
- ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மெலட்டூர்:
அம்மாபேட்டை அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில் நுட்பக்குழு சார்பில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாங்குடி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் அப்துல் நாசர் முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்பக்குழு மேலாளர் மாதா லெட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில்:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடக்கு மாங்குடி பகுதி விவசாயி களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் சிங் சல்பேட், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு பாண்டு, கைதெளிப்பான், பவர் ஸ்பிரே, ஆயில் இன்ஜின் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்பட பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் அட்மா திட்ட உதவி மேலாளர் மங்களேஸ்வரி நன்றி கூறினார்.






