என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விமானப்படை தள சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு  பொது மக்கள் எதிர்ப்பு
    X

    சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விமானப்படை தள சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பொது மக்கள் எதிர்ப்பு

    • இன்னாத்துக்க ன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
    • அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் விமானப்ப டைத்தளம் அமைந்துள்ளது.

    இந்த விமானப்படை தளத்திற்கு கூடுதலாக சுற்றுச்சுவர் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்னாத்துக்கன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மீதமுள்ள சாலையும் கையகப்ப டுத்தப்பட்டு சுற்றுச் சுவர் கட்டும் பணி தொடங்கியது.

    இன்று காலை இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இனாத்துக்கான்பட்டி பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர் .

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், சாலையை கையகப்படுத்தி சுற்று சுவர் கட்டுவதால் நாங்கள் நகருக்குள் செல்ல வேண்டு மென்றால் வேறு வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது .

    இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

    1எனவே எங்களுக்கு வேறு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இதனை ஏற்று க்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவ த்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×