என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1 லட்சம் மதிப்புள்ள சந்தன மரகட்டைகள் கடத்தியவர்  கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டையையும், கைது செய்யப்பட்ட முதியவர்.

    1 லட்சம் மதிப்புள்ள சந்தன மரகட்டைகள் கடத்தியவர் கைது

    • ராம்குமார் நேற்றிரவு பஸ் மூலம் கும்பகோணம் பஸ்நிலையத்திற்கு சென்றார்.
    • மொத்தம் 8 சந்தன கட்டைகள் 31 கிலோவில் இருந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் நாஞ்சி கோட்டை பகுதியை சேர்ந்த வர் ராம்குமார் (வயது 65).

    இவர் நேற்றிரவு பஸ் மூலம் கும்பகோணம் பஸ்நிலையத்திற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சென்னை செல்வதற்காக காத்திருந்தார். அவர் கையில் ஒரு சூட்கேஷ் வைத்திருந்தார்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் வந்த கும்பகோணம் போலீசார் ராம்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் கையில் வைத்திருந்த சூட்கேஷ் திறந்து பார்த்தனர்.

    அப்போது அதில் சந்தனகட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் கும்பகோணம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ராம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    அதில் மொத்தம் 8 சந்தன கட்டைகள் 31 கிலோவில் இருந்தது. அதன் மதிப்பு சுமார் 1.50 லட்சமாகும்.

    இது குறித்து கும்பகோணம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்ச ம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.

    Next Story
    ×