என் மலர்
சிவகங்கை
- சிவகங்கையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
- சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சிவகங்கையில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சென்ற பின்னர் சோதனைகளை எல்லாம் தகர்த்து பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு சிவகங்கை மாவட்டம் பெற்ற புண்ணியமாகும் . சிவகங்கை மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வமணி, ஸ்டீபன்அருள்சாமி, சேவிவியர்தாஸ், சிவாஜி, கோபி, ஜெகதீஸ்வரன், பாரதிராஜன், சோனைரவி.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் ராமநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
- காரைக்குடி அருகே லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் வசிப்பவர் கண்ணன். இவர் ராமநாதபுரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அரசு வாகனத்தில் சென்ற போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரில் உள்ள கண்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. அவைகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிவகங்கை அருகே வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடந்தது.
- போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி சிங்கம்புணரி அடுத்த அ.காளாப்பூரில் உள்ளது எட்டுக்கரை பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கொக்கன் கருப்பர் கோவில். இக்கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது எனவும், நீதிமன்றம் கட்டுவதற்காக பணிகளை அரசு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிந்த எட்டுக்கரை பங்காளிகள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். நேrற்று முன்தினம் வருவாய் துறையினர் அளவிடும் பணியை மேற்கொண்டபோது எட்டுக்கரை பங்காளிகள் அங்கு சென்று பணியை நிறுத்தக்கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
- ஏரியூர் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயம் சிங்கம்புணரி ஒன்றியம் ஏரியூர் கிராமத்தில் உள்ள மலைமருந்தீஸ்வரர், முனிநாதன் மற்றும் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏரியூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 66 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை அலவாக்கோட்டை பன்னீர்செல்வம் வண்டியும், 3-வது பரிசை புதுசுக்காம்பட்டி குணசேகரன் வண்டியும் பெற்றது.
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொண்குண்டுப்பட்டி செல்லை வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி சுந்தர்ராஜ் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தம்பட்டி கதிரேசன் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு பந்தயத்தில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் வண்டியும், 2-வது பரிசை ஆபத்தாரணப்பட்டி பிரபுபழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேலூர் புவனேஸ்வரி எலக்ட்ரிக்கல்ஸ் வண்டியும், 2-வது பரிசை மாம்பட்டி செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி சிதம்பரம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
- கண்மாய் நீரை திறந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- கண்மாயில் மராமத்து பணி செய்வதற்காக தண்ணீரை திறந்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இளையான்குடி
இளையான்குடி இளையான்குடி அருகே உள்ளது குமாரக்குறிச்சி, பெருமச்சேரிகாந்தி நகர், சுந்தனேந்தல் ஆழி மதுரை, நகரகுடி அதிகரை, நெடுங்குளம் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களை சேர்ந்த நீர்ப்பாசன விவசாயிகளை பாதிக்கும் வகையில் எமனேசுவரம் கண்மாயில் இருந்த தண்ணீரை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கண்மாயில் மராமத்து பணி செய்வதற்காக தண்ணீரை திறந்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது ெதாடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா நடந்தது.
- முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராத னைகள் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால் பிரிவு கிராமத்தில் உள்ள செல்வ முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் செல்வ முருகனுக்கு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பங்குனி உத்திர விழா நடந்தது. இதையொட்டி காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் வள்ளி- தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது
இதைத்தொடர்ந்து முருக பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சுவாமி-அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்த னர். மதியம் கோவிலில் நடைபெற்ற அன்னதா னத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு உற்சவர் செல்வமுருகன் மயில்வாகனத்தில் புறப்பாடாகி கால்பிரிவு வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் முருகனை வரவேற்று பூஜை நடத்தி வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகி முருகேசன் செய்திருந்தார்.
மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கோவிலில் தீமிதித்து வேண்டுதல் நிறை வேற்றினர்.
இதைத்தொடர்ந்து பால முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராத னைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பால முருகனை தரிசனம் செய்த னர்.
மானாமதுரையில் புறவழிச்சாலையில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத வழிவிடு முருகன் கோவிலில் நடை பெற்ற பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் மூலவருக்கும் உற்ச வருக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு வழிவிடு முருகன் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர். இரவு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
தாயமங்லம் ரோட்டில் உள்ள பாம்பன்சுவாமி கோவில், கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோவில், குறிச்சி செந்தில் ஆண்டவர் மற்றும் திருப்புவனம், இளை யான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோவில் களிலும் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
- எஸ்.புதூர்-சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்க ளின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆண்டாய்வு மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி எஸ்.புதூர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவை சேர்ந்த அலுவலர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவை யிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள்.
இது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணியாளர்க ளின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியி டங்கள், காலிப்பணியிடங்கள் குறித்தும், தமிழக அரசால் செயல்படுத்தப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளில் முடிவு பெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாந்தி, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜ், எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், சத்யன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- கருமலை சாத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கொன்னத்தான்பட்டி கிராமத்தில் கருமலை சாத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு 29 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி 3 நாட்கள் சிறப்பு ஹோமம் நடந்தது.
பின்னர் பரிகார தெய்வங்களுக்கு மகா பூர்ணாகுதி, தீப ஆராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார் ராமசாமி தலைமையில் கடம் புறப்பாடகி, கோவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் பூங்குன்ற நாட்டு அம்பலம் சண்முகம், கொன்னத்தான்பட்டி ஊர் அம்பலம், பழனியப்பா தேவர் என்ற விஜய், ஊராட்சித்மன்ற தலைவர் அழகு பாண்டியன், சின்ன அம்பலம் முத்தையா தேவர், பூசாரி கருப்பையா, சோலைமணி தேசிகர், கணேச வேளாளர், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொன்னத்தான்பட்டி ஊர் பொதுமக்கள், கிராமத்து இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
- தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று இரவு தேரோட்டம் நடந்தது.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

சிறப்பு அலங்காரத்தில் தாயமங்கலம் முத்து மாரியம்மன்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரி யம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா விழா கடந்த 29-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
இைதயொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், ஆயிரங்கண் பானை, கரும்பு தொட்டில் கட்டி வருதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தி பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வேண்டுதல் களை நிறைவேற்றினர்.
ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நீண்ட வரிசையில் நின்று முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று (வியா ழக்கிழமை) இரவு 7.15 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செட்டியார் மற்றும் அலுவலர் கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- சிவகங்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
- இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் ஏற்பாட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
மருத்துவர் யாழினி, மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், துபாய்காந்தி, ராஜபாண்டி, சரவணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர்.
- மாரியம்மன் கோவில் பங்குனி விழா நடந்தது.
- ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும்.
விழாவையொட்டி அம்மன் கையில் காப்புகட்டும் பூஜை நடந்தது. நாளை (5-ந்தேதி) திருவிளக்கு பூஜையும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 6-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. காப்பு கட்டிய நாள் முதல் காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேகம், பால், தயிர், மஞ்சள் மற்றும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நயினார்வயல் அகத்தீசுவரர் கோவிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு பல வகையான பூக்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
பங்குனி உற்சவ விழா முளைப்பாரி திருவிழாவில் இன்று இரவு அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. நாளை காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.






