என் மலர்
சிவகங்கை
- 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
- ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று ஐப்பசி முதல் நாளில் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசுவரர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து மதியம் தேவகோட்டை விருசுழி ஆற்றை வந்தடைந்தது.
ஆற்றில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப் பட்டன.
முடிவில் அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றடைந்தன. இந்த விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அடசி வயல் கள்ளிக்குடி சேன்டல் பெரியாண், திருமண வயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரை வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.
- வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
- விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தில் வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருமஞ்சனம், பால், அரிசி மாவு, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.
- தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
- தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து ''எனது வாக்கு, எனது உரிமை-ஒரு வாக்கின் சக்தி'' என்ற தலைப்பில் சுவரொட்டி தயாரித்தல் போட்டியை நடத்தியது. முதல்வர் அப்பாஸ் மந்திரி, தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பாக சுவரொட்டி தயாரித்த மாணவ-மாணவிகளை பாராட்டினர். சிறந்த சுவரொட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரால் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டிகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோருடன் இணைந்து தலையாரி லட்சுமணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அரசு விதியை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு சார்பில் சிவகங்கை நகரில் உள்ள பழக்கடை, காய்கறி கடை, பெட்டிக்கடை, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் பிளாஸ்டிக் சோதனை நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன் தலைமையில் நடந்த இந்த சோதனையில் துப்புரவு அலுவலர் ஜெயபால் கடைகளிலிருந்து 180 கிலோ பிளாஸ்டிக் பை, கப் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். அரசு விதியை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
- தீபாவளி பலகாரம் தொடர்பான புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- உணவு புகார்்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார்் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்்களை தெரிவிக்கலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமா னதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப்பொ ருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்காி உணவு பொருட்களை தயாரிப்பவா்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக கூடாது. இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் உணவு கையாள்பவா்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லாத வகையில் பணியில் அமா்த்தப்பட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விவரச் சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவாி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வகையில் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்களை விற்பனை செய்த பின்னா் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண், பதிவு எண்ணை அச்சடித்து இருக்க வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உடனடியாக
இது தொடா்பான உணவு புகார்்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார்் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு விழா நடந்தது.
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்குடி
அ.தி.மு.க.பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், கவுன்சிலர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா, கனகவள்ளி, ராதா, ராம்குமார், நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் திருஞானம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், தேவகோட்டை ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், இளைஞர் பாசறை கண்ணதாசன், கணேசன், சதீஷ், ரேவதி, கல்லல் கவுன்சிலர் முருகேசன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி அருகே மறுகால் பாயும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர்.
- ஏறி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்வதை பார்க்க ெபாதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஏரியூர் ஊராட்சியில் ஏரி கண்மாய் உள்ளது. சுமார் 227 ஏக்கர் பரப்பளவில், 3 டி.எம்.சி. தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு இது பெரிய கண்மாய் ஆகும்.
இந்த கண்மாய்க்கு நீர் வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, எறக்காமலை, அழகர்கோவில் மலை, பூதகுடி மலை போன்ற பல்வேறு மலைகளில் இருந்து பெய்யும் மழைநீர் இந்த கண்மாய்க்கு வருகிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கண்மாயின் நீர்வரத்து பாதை கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு களால் தண்ணீர் வரத்து பாதை முற்றிலுமாகத் தடைபட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் பெய்த மழையால் கண்மாய் மறுகால் பாய்ந்தது.தற்போது சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, வரத்துக் கால்வாய் மூலம் ஏரி கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து அனைத்து கலிங்குகளின் வழியாக தண்ணீர் மறுகால் பாய்கிறது.
அருவி போல் தண்ணீர் கொட்டுவதை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். மறுகால் பாயும் தண்ணீரில் அவர்கள் உற்சாக குளியல் போடுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், தண்ணீர் அருவி போல் கொட்டுவதை பார்க்கும் போது, குற்றாலம், மூணாறு, போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதைப் போல உணருகிறோம் என்றனர்.
ஏறி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்வதை பார்க்க ெபாதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மேலூர் அருகே உள்ள மேலநாட்டார் மங்கலத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் ரகு,
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிங்கம்புணரி:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலநாட்டார் மங்கலத்தை சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் ரகு (வயது 33). சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதன் காரணமாக துக்கத்தில் இருந்த ரகு அடிக்கடி மது குடித்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்திருந்த ரகு நேற்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு சென்றார். அங்குள்ள பெரியார் கால்வாய் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் இரவு ரகு மது அருந்தினார்.
போதை தலைக்கேறிய நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். பெரியார் கால்வாய் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த கால்வாயில் விழுந்தது. இதில் ரகு கால்வாயில் மூழ்கினார். இரவு நேரம் என்பதால் அவர் கால்வாயில் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. போதையில் இருந்த காரணத்தால் அவரால் சுதாரித்துக் கொள்ள முடிய வில்லை. இதன் காரணமாக தண்ணீரில் மூழ்கி ரகு மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 20 நிமிடங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தனர்.
- மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் பசுமை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 6 நாட்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதனை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி காரைக்குடி கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பசுமை திருவிழாவை தொடங்கி வைத்தார்.
5-ம் நாளான நேற்று வரை 80 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமுக ஆர்வலர்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினர்க ளுக்கும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, 6-ம் நாளான இன்று கின்னஸ் சாதனை முயற்சியாக, 20 நிமிடங்களில் 25 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.
அழகப்பா கலை கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை முயற்சியை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் லால்வேனா, காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மரங்களை ஆர்வமுடன் நட்டனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது. முடிவில் ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செயலாளர் டாக்டர் குமரேசன் நன்றி கூறினார்.
- விவசாயிகள் உணவு உற்பத்தியை பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் செட்டிநாட்டில் உள்ள உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரிய மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது.
பாரம்பாரிய மிக்க உள்ளுர் ரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டம் தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய மிக்க உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படு த்துதல் விவசாய விஞ்ஞா னிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
அனைத்து விவசாயி களும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உயர்ரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி கண்காட்சியில் பங்கேற்று இதில் இடம் பெற்றுள்ள வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருட்களை அறிந்து, இது குறித்த கூடுதல் விவரங்களை அலுவலர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது உணவு உற்பத்தியைப் பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தடுப்பு கம்பியில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் கல்லூரியில் படித்து வரும் தனது தங்கையை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அவர் கல்லல் அருகே உள்ள ஏழுமாபட்டி பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட பொது மக்கள் நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
- குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் ப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டு களுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலா்களின் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 2020-21-ம் ஆண்டு மற்றும் 2021-22-ம் ஆண்டிற்கு குறுங்காடு வளா்ப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி பொட்டபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2022-23-ன் கீழ் சுமார் 3½ ஏக்கா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு மரக்கன்று வகைகளான வேம்பு 150 எண்ணிக்கையும், புங்கை 200 எண்ணிக்கையும், பூவரசு 150 எண்ணிக்கையும், தேக்கு 100 எண்ணிக்கையும், மூங்கில் 100 எண்ணிக்கையும், நிலவாகை 100 எண்ணிக்கையும், வாகை 100 எண்ணிக்கை என மொத்தம் 900 எண்ணிக்கை கொண்ட குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முக்குடி ஊராட்சியில். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2021-22-ம் ஆண்டில் குறுங்காடு வளா்ப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, கொய்யா, மா, தென்னை, வேம்பு, புளி, வாழை, மூங்கில், முருங்கை, சப்போட்டா, தேக்கு உள்ளிட்ட 20 வகையான சுமார் 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவிப் பொறியாளா்கள் தமிழரசி, தேவிகா, ப்புவனம் வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் அங்கயங்கண்ணி (வ.ஊ.), ராஜசேகரன் (கி.ஊ), ஒன்றியப்பணி மேற்பார்வையாளா் செல்வம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.






