வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.
வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
Published on

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தில் வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திருமஞ்சனம், பால், அரிசி மாவு, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான அதிகாரி மற்றும் ஸ்தானிகர் ரவி குருக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com