என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water flowing on the other leg"

    • சிங்கம்புணரி அருகே மறுகால் பாயும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர்.
    • ஏறி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்வதை பார்க்க ெபாதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஏரியூர் ஊராட்சியில் ஏரி கண்மாய் உள்ளது. சுமார் 227 ஏக்கர் பரப்பளவில், 3 டி.எம்.சி. தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு இது பெரிய கண்மாய் ஆகும்.

    இந்த கண்மாய்க்கு நீர் வரத்தாக மதுரை மாவட்டத்தில் உள்ள கரந்தமலை, எறக்காமலை, அழகர்கோவில் மலை, பூதகுடி மலை போன்ற பல்வேறு மலைகளில் இருந்து பெய்யும் மழைநீர் இந்த கண்மாய்க்கு வருகிறது.

    30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கண்மாயின் நீர்வரத்து பாதை கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு களால் தண்ணீர் வரத்து பாதை முற்றிலுமாகத் தடைபட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் பெய்த மழையால் கண்மாய் மறுகால் பாய்ந்தது.தற்போது சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, வரத்துக் கால்வாய் மூலம் ஏரி கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து அனைத்து கலிங்குகளின் வழியாக தண்ணீர் மறுகால் பாய்கிறது.

    அருவி போல் தண்ணீர் கொட்டுவதை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். மறுகால் பாயும் தண்ணீரில் அவர்கள் உற்சாக குளியல் போடுகின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், தண்ணீர் அருவி போல் கொட்டுவதை பார்க்கும் போது, குற்றாலம், மூணாறு, போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதைப் போல உணருகிறோம் என்றனர்.

    ஏறி கண்மாயில் தண்ணீர் மறுகால் பாய்வதை பார்க்க ெபாதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×